ஊழியர்களுக்கு கார், பைக்!

டென்சில் ராயன், தனது நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 20 ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கார்கள், பைக்குகளை அளித்து அசத்தினார்.
டென்சில் ராயன்
டென்சில் ராயன்
Published on
Updated on
1 min read

சென்னையில் இயங்கிவரும் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்கல்ஸ் சொல்யூஷனஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டென்சில் ராயன், தனது நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 20 ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கார்கள், பைக்குகளை அளித்து அசத்தினார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

'2022- ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கினேன். கப்பல், தளவாடத் துறையில் புதிதாய் நுழைந்து இரு ஆண்டுகளிலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். வேகமாக வளர்ந்து வரும் உலகச் சந்தையின் தேவைகளுக்கேற்ப, புதுமையான, திறமையான, செலவு குறைந்த அளவில் பொருள்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

வணிகத்தையும் நுகர்வோரையும் தொடர்ந்து சிறந்த சேவையின் வாயிலாக ஈர்த்துள்ளோம். அதிநவீன தொழில்நுட்பத்தையும், நிலையான நடைமுறைகளையும் மேம்படுத்துவதில் எங்கள் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் ஏற்றுமதியும் அதிகரித்தது.

இனிவரும் காலங்களில் அனைத்து கப்பல் போக்குவரத்துக்கான தளவாட வணிகங்களை எளிதாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம். பாரம்பரியக் கப்பல் போக்குவரத்துகளை நன்முறையில் அறிந்துள்ளோம். தளவாட செயல்முறைகளில் தோல்வியை ஏற்படுத்தும் காரணிகளை புரிந்துகொண்டுள்ளதால், இந்தத் துறையில் ஒரு புதிய தரத்தைக் கட்டமைப்போம்.

வாடிக்கையாளர்களின் மனநிறைவு என்பது நிறுவனத்தின் முக்கிய மதிப்பாகும். இதன்மூலம் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வணிகம் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும்.

வியத்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி, சர்வதேச சந்தையிலும் கால் பதித்துள்ளோம். 2028- ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய, பசிபிக் நாடுகளின் பிரதான சர்வதேச சந்தைகளில் 2028-க்குள் எங்கள் இருப்பை நிறுவ ஆய்வுகளைத் தொடங்கியுள்ளோம்.

தளவாடத் துறையில் உள்ள பொதுவான சவால்களை எதிர்கொண்டு, இரண்டு ஆண்டுகளிலேயே நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்ததற்கு முதன்மைக் காரணம் ஊழியர்கள்தான்.

அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ஹோண்டா ஸ்கூட்டர்கள், ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை அண்மையில் வழங்கினேன். ஸ்டார்ட் அப் நிறுவனமானது தங்களது ஊழியர்களை கெளரவிக்கும் மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதான ஒன்று. அதனையும் நிகழ்த்திக் காட்டியுள்ளேன்.

ஊழியர்களின் ஒட்டுமொத்த நன்மதிப்பையும், நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறோம். இதனால், அவர்களின் உற்பத்தித்திறனும், ஈடுபாடும் அதிகரிக்கும். இதோடு, நிறுவனத்திலும் ஊழியர்களைத் தக்கவைக்க முடியும்.

ஊழியர்களுக்குத் தலைமைத்துவ திறன்களை உருவாக்கும் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கச் செய்கிறோம். வாடிக்கையாளர் முன்னுரிமையில் கவனம் செலுத்தும் முடிவுகளை எடுக்கவும், அவ்வப்போது வாடிக்கையாளர் கருத்து அமர்வுகளை நடத்தவும், தயாரிப்புகள், சேவைகள், செயல்முறைகளை செம்மைப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தவும் அவர்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இதனால், எங்கள் ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன், அதிக இலக்குகளை அடையும் வகையில் லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றனர்'' என்கிறார் டென்சில் ராயன்.

- தாம்பரம் மனோபாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com