லேஹிய பதத்தில் இறக்கி, சூடு ஆறியவுடன் 190 கிராம் தேன் மற்றும் 12 கிராம் வீதம் சுக்கு, மிளகு, திப்பிலி நாககேஸரம் சேர்த்தால், அதற்கு 'தந்திஹரீதகீ' லேஹியம் என்று பெயர். 12 கிராம் லேஹியம், ஒரு கடுக்காய் என காலையில் சாப்பிட (உணவுக்கு முன்), மலச்சிக்கல் நீங்கும். கூடவே மண்ணீரல் சார்ந்த உபாதை, வீக்கம், குல்மம், மூலம், இதய நோய்கள், சோகை, மஞ்சள் காமாலை, கிராணி, குமட்டல், முறைக் காய்ச்சல், தோல் உபாதைகள் மற்றும் ருசியின்மை போன்ற உபாதைகள் பெண்களுக்கு மிக முக்கியமாக குணமாக்கித் தரும். இதை 'சக்கரத்தார்' எனும் முனிவர் பரிந்துரை செய்திருக்கிறார்.