கண்டது
(புதுச்சேரி டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலின் பெயர்)
'மதிகெட்டான்வாய்க்கால்''
-பி.ஆஷாலட்சுமி,
செம்பனார்கோவில்.
(விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'துறவி''
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
(திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'வளைகாப்பு''
ஆர்.பி.லிங்கராஜ், திண்டுக்கல்.
கேட்டது
(திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலரும், ஊழியரும்...)''
'சார்.. கோவில், குளம் போகணும்.. லீவ் வேணும்...''
'என்ன கோவில்... என்ன குளம்...''
'சங்கரன்கோவில்.. விளாத்திகுளம்...''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
(திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)
'முப்பது வயசாச்சு.. ரோட்டில் போகிற நாய்க்கு எல்லாம் பயப்படுறீயே..?''
'எனக்கு முப்பது வயசுன்னு அந்த நாய்க்குத் தெரியுமா சார்?''
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
(பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர் பேசியது)
' பரவாயில்லையே ரமேஷ் என்கிட்ட வாங்கின ஆயிரம் ரூபாயை சொன்ன தேதியில் குடுத்திட்டானே..?''
'அடுத்து இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்பான் பாரு...''
பண்ருட்டி பரமசிவம்
யோசிக்கிறாங்கப்பா!
'நீ பேசும் வார்த்தைகள் எல்லோருக்கும் புரியும். ஆனால் உன் மௌனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.''
மல்லிகா அன்பழகன், சென்னை78.
மைக்ரோ கதை
நண்பர் ஒருவர் ஒரு வாரம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அதற்கு முந்தைய நாள் என்னை உதவிக்கு அழைத்துகொண்டு, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து
கொண்டு வங்கிக்குச் சென்றார். அங்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பத்தாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தார். 'ஏன் இவ்வளவு குறைத்து நகைக் கடன் வாங்கறீங்க?'' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துகொண்டே, 'குடும்பத்தோட போறோம். நகைகளை வீட்டில் வைத்திருப்பதைவிட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். வந்தவுடன் நகையை மீட்டு கொள்ளலாம். அதற்குதான் குறைவான தொகைக்கு அடகு வைத்தேன்'' என்றார்.
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
எஸ்எம்எஸ்
காலம் பேசாது. ஆனால் கட்டாயம் பதில் சொல்லும்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
அப்படீங்களா!
பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயன்பாட்டை பாதுகாப்பானதாக்கவும் ஃபேஸ்புக் அவ்வப்போது புதிய சேவைகளை அறிமுகம் செய்துவருகிறது.
ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைய கடவுச் சொல் எனும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். இதை பலர் மறந்துவிட்டு பின்னர் தவிப்பதுண்டு. இந்தப் பிரச்னையை தீர்க்க 'பாஸ்கீ' சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் கைப்பேசிகளிலும் இதை பயன்படுத்தலாம். பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக கைப்பேசிகளில் உள்ள ஃபிங்கர்பிரிண்ட், ஃபேஸ் ஸ்கேன், பின் ஆகியவற்றை பயன்படுத்தி ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழையலாம். உங்கள் யூசர்நேமை வைத்து வேறு யாரும் ஃபேஸ்புக் கணக்கில் நுழைய முடியாது. இதற்காக உங்கள் கைப்பேசி வேண்டியது அவசியம்.
இந்த;ஈ சேவையைப் பெற ஃபேஸ்புக் ஆப்பில் உள்ள செட்டிங்ஸில் உள்ள அக்கவுண்ட் சென்டருக்கு சென்று பாகஸ்கீயை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த பாஸ்கீயை ஃபுபேஸ்புக் மெசெஞ்சர், மெட்டா பே, இணையவழியில் பொருள்களை வாங்கவும் பயன்படுத்தலாம். பாஸ்கீக்கள் உங்கள் கைப்பேசியிலேயே சேமிக்கப்படுவதால், பாஸ்வேர்டுகளைவிட பாஸ்கீக்கள் மிகவும் பாதுகாப்பானது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.