காதல் பறவை என்றதும், கிளி இனத்தைச் சேர்ந்த 'லவ் பேர்ட்ஸ்' நினைவுக்கு வரும். ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவுகளில் அதிகம் காணப்படும் 'போவர்' எனும் பறவை தனித்துவமான காதல் நடத்தைக்குப் பெயர் பெற்றது. ஆண் பறவைகள் தனது ஜோடியை கவர்ந்திழுக்க மரக்கிளைகள் பூக்கள், கூண்டுகள், பளபளப்பான பொருள்களால் இருப்பிடத்தை அமைத்து கட்டுவது அதன் சிறப்பாகும்.
ஜோடி தேர்வில் கூட ஜோடியின் வண்ணத்துக்கு முன்னுரிமை உண்டு. சில நீல நிறத்தையும், மற்றவை சிவப்பு, மஞ்சள் நிறத்தையும் துணையாக நாடுகிறது. தனது இருப்பிடத்தில் நின்றபடி தலையை ஆட்டும். நடனமாடும். இனிமையாக பாடவும் செய்யும். பெர்ரி பழங்களைப் பரிசளிக்கும்.
ஜோடியை வளைக்க பல வாரங்கள்கூட ஆகுமாம். இதனால் போவர் பறவையை 'இயற்கையின் ரோமியோ' என அழைக்கின்றனர். இந்தப் பறவையை ஆஸ்திரேலியாவின் வடக்கு, மத்திய, மேற்கு, தென் கிழக்கு பகுதிகளிலும், நீயுகினியா பகுதிகளிலும் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.