மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் இன்று (பிப். 4) மாலை பதவியேற்றார்.
மணிப்பூர் வரலாற்றில் முதல்முறையாக குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் என்ற பெண் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு துணை முதல்வராக, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த லோசி டிகோ பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஓராண்டாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வந்த நிலையில், பாஜக இன்று ஆட்சி அமைத்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதலில் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மற்றொரு நபரை துணை முதல்வராக நியமிக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தற்போது மணிப்பூர் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்ற குகி இனத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நெம்சா கிப்கென்.
யார் இவர்?
நெம்சா கிப்கென் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவராவார். 2012 முதல் காங்போக்பி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள இவர், மாநில அமைச்சரவையில் பல பொறுப்பு வகித்துள்ளார்.
2017-2020 வரையிலான பிரேன் சிங் ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை, ஜவுளித் துறை அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட குகி இன மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பலகட்ட முயற்சிகளை எடுத்துள்ளார். குகி இளைஞர்களின் எதிர்கால நலனுக்கான முன்னின்று பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். குகி தேசிய முன்னணி இயக்கத்தின் தலைவரான தங்போய் கிப்கென் இவரின் கணவராவார்.
Summary
Who is Nemcha Kipgen, a Kuki leader likely to be Deputy CM of Manipur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா பதவியேற்பு!

கர்நாடக துணை முதல்வராகிறார் பரமேஸ்வரா! சித்தராமையா அறிவிப்பு!

145 ஆண்டுகளுக்குப் பிறகு செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் முதல் பெண் முதல்வா் நியமனம்!

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




