டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோயை குணப்படுத்த வழி என்ன?

பவழமல்லி பூ, இலைகளினால் நீரிழிவு (சர்க்கரை) நோயைக் குணப்படுத்தவோ, குறைக்கவோ முடியுமா?

News image
Updated On :8 மார்ச் 2025, 6:40 pm

DIN

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

பவழமல்லி பூ, இலைகளினால் நீரிழிவு (சர்க்கரை) நோயைக் குணப்படுத்தவோ, குறைக்கவோ முடியுமா?

வே.சதாசிவம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்.

சுமார் பதினைந்து மில்லி பவழமல்லியின் இலைச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்ற உபாதை குறைவதுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவிடும். அதன் கசப்புச் சுவை, எளிதில் செரிக்கும் லேசான தன்மை, வரட்சியான குணம், சூடான வீரியம் போன்றவற்றின் தன்மைகளால் இதுபோன்ற செயலை நிகழ்த்திக் காட்டுகிறது.

கூடவே குடலில் பரவியிருக்கும் தேவையற்ற, உபாதைகளைத் தோற்றுவிக்கும் கிருமிகளையும் நசித்துவிடும் சிறப்பையும் அது பெற்றிருக்கிறது. இடுப்பிலிருந்து தொடை வழியாக முட்டி வரை செல்லக் கூடிய 'சயாடிகா' எனும் நரம்பில் வலியையும் இலைச்சாறு குணப்படுத்தித் தரும்.

வயிற்றில் செரிமானம் சரிவர ஆகாமல் ஏற்படும் வயிறு எரிச்சல், வயிற்று உப்புசம், குமட்டல், அடிக்கடி வாந்தி, ஏப்பம், மார்பில் எரிச்சலுடன் கூடிய வலி, மூச்சிரைப்பு, அதிக வியர்வை, மலச்சிக்கல், மூலம், கல்லீரல், ரத்தம் சார்ந்த கெடுதிகள், மண்ணீரல் உபாதைகள் போன்றவையும் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மூட்டுவலிகள் (எலும்புகள் கூடும் இடங்கள்) பதினைந்து கிராம் பவழமல்லிச் செடியின் வேரெடுத்து, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, இருநூற்று ஐம்பது மில்லியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என சமபங்காகப் பிரித்து இளஞ்சூடாக வெறும் வயிற்றில் பருகினால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

இலை அல்லது பவழமல்லிச் செடியின் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒன்று முதல் மூன்று கிராம் வரை வாயினுள் தூவிவிட்டு, சிறிது வென்னீர் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால், சளியினால் ஏற்படும் இருமல், ஆஸ்துமா எனும் மூச்சுத்திணறல் உபாதைகள் மட்டுப்படும்.

பூவின் காம்பு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால், அதன் வெண்இதழ்களுக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது. இந்த ஆரஞ்சு நிறத்துக்குக் காரணம் அதில் பொதிந்துள்ள 'நிக்டேன்தின்' எனும் வேதிப்பொருளாகும். பூவில் டீமேனிட்டால், டேனின், க்ளூகோஸ் போன்றவையும் சேர்ந்துள்ளன.

பூவை மைய அரைத்து, தொடை இடுக்குகளில் ஏற்படும் அரிப்பின் மீது பற்று போட்டால் விரைவில் குணமாகும். பாம்புக்கடியால் ஏற்பட்டு வரும் உபாதைகளிலும் இதன் பயன்பாடு இருந்துள்ளதாக மூலிகை நூல்களில் காணப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 300 400 எம்.ஜி./ டி.எல். என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் சுரப்பு சரிவர வேலை செய்யாததால், அணுக்களுக்குத் தேவையான சக்தியானது குளுக்கோஸ் வடிவில் கிடைப்பதில்லை.

மூளையின் உந்து சக்தியால் ஏற்படும் பசி உணர்வு தூண்டுதலால் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் குளுக்கோஸாக மாறாமல் கிடைக்கும்பட்சத்தில், ரத்த சர்க்கரை அளவு கூடுவதால் லாபம் ஒன்றுமில்லை.

உடல் எடை குறையும், சிறுநீர் கழிப்பது, பசி, தாகம் என்ற மாறிமாறி ஏற்படும். இந்த நிலையில், பவழமல்லி இலைச்சாறு பெரும் பங்காற்றி அணுக்களுக்குத் தேவையான குளுக்கோஸ் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.