'இன்ஸ்டாகிராம்' பதிவுகளில் சம்பாதிக்க...

'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பல பிரபலங்கள் 'இன்ஃபிளுயென்ஸர்'கள் எனப்படும் 'தாக்கம் ஏற்படுத்துபவர்கள்' என்று கருதப்படுகின்றனர்.
'இன்ஸ்டாகிராம்' பதிவுகளில் சம்பாதிக்க...
Updated on
2 min read

'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பல பிரபலங்கள் 'இன்ஃபிளுயென்ஸர்'கள் எனப்படும் 'தாக்கம் ஏற்படுத்துபவர்கள்' என்று கருதப்படுகின்றனர். இவர்கள் தங்களது செல்வாக்கு, பிரபலத்துக்கு ஏற்றவாறு ஏராளமாய் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும், பதிவு, ரீல்ஸ், பதிவு செய்யும் அனைவருக்கும் அன்பளிப்போ, சன்மானமோ கிடைப்பதில்லை. 'ஏன் எங்களுக்கு சன்மானம் தருவதில்லை..' என்ற பதிவிடுகளும் உண்டு.

மும்பையில் உள்ள 'மெட்டா' அலுவலகத்துக்கு வருகை தந்த இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொúஸரியை நாட்டின் 15 வெவ்வேறு நகரங்களிலிருந்து வந்திருந்த 120-க்கும் மேற்பட்ட பதிவர்கள் கேள்விகளையும் எழுப்பினர். 'இந்த தளத்திலிருந்து சன்மானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்' என்பதை பதிவர்களுக்கு ஆடம் மொúஸரி கூறிய வழிகாட்டுதல்கள்:

பதிவுகள், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, பார்வையாளர்களுக்குச் சென்றடைவதை அதிகரித்தல், பார்வையாளர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து தக்கவைத்தல், அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்டவற்றால் பதிவுகள் பிரபலம் அடையும். அதனால்தான் பதிவர்களை ஊக்கப்படுத்த 'என்னிடம் எதையும் கேளுங்கள்' என்ற நிகழ்ச்சியை இணையவழியிலும், நேரடியாகவும் அடிக்கடி நடத்தி வருகிறேன்.

பல படைப்பாளிகள் 'நடன ரீல்'களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். உலகிலேயே எனக்கு மிகவும் வித்தியாசமான வேலை இருப்பதைப்போல் உணர்கிறேன். நானே இந்த மாதிரி கூட்டத்தில் பங்கேற்கும்போது, சில நடன ரீல்களில் பங்கேற்றுள்ளேன்.

இன்ஸ்டாகிராம் தற்போது அதன் விளம்பர வருவாயை யூடியூப் போன்று பதிவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, பதிவாளர்கள் சில தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதன் மூலம் அந்தப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து ஊக்க வெகுமதியைப் பெறுகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் பிறரை 'சட்'டென்று ஈர்க்கக் கூடிய உள்ளடக்கத்தை உருவாக்க பதிவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து ஆய்வு செய்துள்ளோம். இதன்படி, பதிவர்கள் பதிவு செய்யும் ரீல்ஸ்களின் எண்ணிக்கை, படங்கள், செய்திகள் பதிவுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணம் சம்பாதிக்கலாம்.

உங்களுக்கு 'ஊக்க வெகுமதி'யை வழங்குவதற்கு, பதிவுகளால் நாம் பணத்தை இழக்கக் கூடாது, பணம் தருவதும் பெறுவதும் சங்கடமாக அமையக் கூடாது, தகுதி அளவுகோல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். வெகுமதிக்குத் தகுதி பெற எதை செய்ய அல்லது அடைய வேண்டும் என்பதை பதிவர்கள் அறிந்திருக்க வேண்டும். அது 'அதிர்ஷ்ட' அடிப்படையில் அமைந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பதிவர்கள் முதல் அளவுகோளைக் கூட எட்ட முடியவில்லை. சுவாரசியமான உள் அடக்கத்தை உருவாக்க பதிவாளர்களுக்கு பணம் வழங்கும்போது, பதிவர்கள் ஆர்வத்துடன் அதிகமான பதிவுகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் பல பதிவுகள் உள்ளடக்கம் அவர்கள் முன்பு உருவாக்கிய பதிவின் உள்ளடக்கத்தைப் போல ஈர்க்கக் கூடியதாக அமைவதில்லை. இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து, இன்ஸ்டாகிராம் பதிவர்களுக்கு வழங்கும் தொகையைவிட, இன்ஸ்ட்டாகிராமுக்கு வரும் வருமானம் குறைந்துவிடுகிறது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, 40 கோடிகளுக்கும் அதிகமான பயனர்களை இந்தியா கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோரை இன்ஸ்டாவுக்கு ஈர்ப்பதில்தான் பதிவர்களின் வெற்றி உள்ளது.

பதிவர்கள் ஆர்வத்துடன் சுவாரசியமான உள்பொருளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். சுவாரசியமற்ற பதிவுகளால், பதிவுகளை பார்ப்பதில் பார்வையாளர்களின் ஆர்வம் குறையும். 'முந்தைய நாள் சுவாரசியம் இன்று காணால் போகும். அதனால் பதிவுகள் புதியதாக, சுவாரசியமாக இருக்க வேண்டும். எனக்கும் இது நடந்திருக்கிறது. நானும் என்னைத் தொடர்பவர்களை இழந்திருக்கிறேன். காரணம் எனது பதிவுகள் பார்வையாளர்களைக் கவரவில்லை என்பதுதான்.

பதிவரின் வெற்றியும் அவரது பதிவு ஒரு நாளில் எத்தனைப் பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்பதில்தான் உள்ளது. இந்த சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு பதிவரும்

இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து கணிசமாகச் சம்பாதிக்கலாம்'' என்கிறார் ஆடம் மொúஸரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com