தங்க நகரங்கள்...

உலகத்தின் தங்க நகரங்களான துபையும், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
தங்க நகரங்கள்...
Published on
Updated on
1 min read

உலகத்தின் தங்க நகரங்களான துபையும், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.

துபையின் முக்கிய ஏற்றுமதி தங்கம்தான். லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் துபைக்கு வருகை தந்து, சுற்றுலாத் தலங்களைப் பார்க்கிறார்கள். அதோடு அவர்கள் மறக்காமல் உலகின் மிகப் பெரிய சூப்பர் மால்களில் ஒன்றான கோல்ட் செளக் செல்கின்றனர்.

இங்கு தங்க நகைகள், கட்டிகள், ஆபரணங்கள் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகளில் 22 காரட், 24 காரட்டுகளில் உயர் தூய்மையும், நம்பகத் தன்மையும் கொண்ட தங்கத்தை வாங்கிச் செல்கின்றனர். எண்ணெய்க்கு முன்பே தங்கம், முத்து வர்த்தகத்தில் பிரபலமான துபை ஏராளமான செல்வத்தை ஈட்டியது.

20-ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியா, பெர்சியா, ஆப்பிரிக்காவை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கத்தைப் பரிமாறிக் கொள்ள துபையின் துறைமுகங்களைப் பயன்படுத்தினர்.

பாரசீக வளைகூடாவில் நகரத்தின் இருப்பிடம் உள்ளதால் அதை ஒரு இயற்கை வர்த்தகமாக மாற்றியது.

1880-இல் ஜோகன்ஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு உலக தங்க உற்பத்தியில் பாதி உற்பத்தி செய்யப்படுகிறது. சுரங்கங்கள் பெருமளவில் பெருக நகரமும் தங்க நகரமாக மாறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com