என்ன விலை அழகே!

அழகால் ஈர்க்கப்படாதவர் யார் தான் உண்டு.
என்ன விலை அழகே!
Published on
Updated on
2 min read

அழகால் ஈர்க்கப்படாதவர் யார் தான் உண்டு.

1951-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் எர்ல் மார்லி என்பவரால் 'மிஸ் வேர்ல்ட்' விருது வழங்கப்பட ஆரம்பித்தது. அவர் 2000-ஆம் ஆண்டில் மறைந்தார். உடனே அவரது மனைவி ஜூலியா மார்லி இதைத் தொடர்ந்தார். மிஸ் யுனிவர்ஸ், மிஸ் இண்டர்நேஷனல், மிஸ் எர்த் ஆகியவற்றுக்கு இணையாக இது பேசப்பட்டு மதிக்கப்படுகிறது.

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாதா சாங்ஸ்ரி, 2025-ஆம் ஆண்டில் மிஸ் வோர்ல்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வயது 24 முதல் 26-க்குள் இருக்கும். இவர் ஒரு மாடல் அழகி. சமூகசேவையில் முன்னணி வகித்து கல்வி மற்றும் சமத்துவ மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு அனைவரின் பாராட்டையும் பெறுபவர் இவர். 108 அழகிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

செக் நாட்டைச் சேர்ந்த க்ரிஸ்டினா பிஸ்கோவா 2024 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றார். இவரும் மாடல் அழகிதான். வயது 24. சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இவர் பாடுபடுகிறார். 112 அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

2021-ஆம் ஆண்டிற்கான விருது போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாஸ்காவிற்கு வழங்கப்பட்டது. 14-ஆம் வயதிலிருந்தே மாடல் துறையில் ஈடுபட்ட இவர் ஃபேஷன் விழாக்கள் பலவற்றில் பங்கு கொள்ள ஆரம்பித்தார். இவரது வயது 22. தைரியத்

தாலும் இதயத்தாலும் மேன்மை அளக்கப்படுகிறது என்ற பொன்மொழியை உதிர்த்துப் பெயர் பெற்றவர் இவர். 97 அழகிகள் போட்டியில் கலந்துகொண்டனர்.

ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன் சிங் 2019-ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற்றார். இவரது வயது 23. ஜமைக்காவிலிருந்து இந்த விருதைப் பெற்ற நான்காவது அழகி இவர். இன துவேஷத்தை எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்தவர் இவர். தோலின் நிறத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டவர். இவரது கொள்கையாலும் பாரம்பரிய அழகு பற்றிய விளக்கத்தையும் உடைத்து இந்த விருதைப் பெற்ற இவர் உலகில் அனைவராலும் பாராட்டப்பட்டார். 111 அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

மிஸ் வேர்ல்ட் விருது பெறுவோருக்கு எட்டரை கோடி ரூபாய் வழங்கப்படும். ரத்னம் பதித்த கிரீடம் தலையில் சூட்டப்படும். மாடலிங் துறையில் ஒப்பந்தங்கள் செய்யப்படும். மிஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக இவர் நியமிக்கப்படுவார். விளையாட்டுப் பரிசுப் பொருள்கள் இவருக்குத் தரப்படும். எங்கு வேண்டுமானாலும் இலவசமாக இவர் பயணிக்கலாம்.

அழகு என்பது என்ன என்பதைப் பற்றி உலகக் கவிஞர்கள் பலவிதமாக வர்ணித்துள்ளனர்.

தமயந்தியின் அழகை புகழேந்தியின் பாக்களில் கண்டு பிரமிக்கலாம். வியாஸரின் வார்த்தைகளில் திரெளபதியின் அழகைக் கண்டு திகைக்கலாம்.

சரித்திர ஏடுகளைப் புரட்டினால் கிளியோபாட்ராவின் அழகு பிரமிக்கப்படுகிறது. காலம் அவளது அழகை வாட வைக்க முடியாது. சித்தூர் ராணி பத்மினியின் அழகு உலகில் அனைவராலும் வியக்கப்படும் ஒன்று. செக்கச் சிவந்த நிறத்தில் பேரழகியாகத் திகழ்ந்த அவர், நீர் அருந்தும் போது அது தொண்டைக் குழியில் இறங்கும் அழகைக் கேட்டு பிரமித்தவர்கள் பலருண்டு. அவர் ஆண்கள் முன் வருவதே அரிது.

அழகுக்கு நமது இலக்கியமும் அறநூல்களும் தரும் விளக்கம் அற்புதமானது. ரமணீயதாம் என்பது அழகைக் குறிக்கும் சொல். எது நேரத்திற்கு நேரம் புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அந்த உருவமே அழகிய உருவம்.

எப்பொழுதெல்லாம் பார்க்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு தடவையும் ஒரு புது வித அழகை மிளிர வைக்கும் பெண்ணே 'ரமணீ' என்று அழைக்கப்படுகிறாள் என்கிறது நமது பாரம்பரிய விளக்கம்.

சரி, மிஸ் வேர்ல்ட் அழகிகளைப் பார்த்து அவர்கள் இந்த இலக்கியத் தரத்துக்கு உட்படுகிறார்களா என்று பார்த்து உங்களது தீர்ப்பை நீங்களே வழங்கிவிடலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com