பேல்பூரி

டியர்... கல்யாணத்துக்குப் பிறகும் இந்த அன்பு நிலைக்குமா?
பேல்பூரி
Published on
Updated on
1 min read

கண்டது

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூரின் பெயர்...)

'வேர்க்கிளம்பி'

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

(ஓசூரில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது...)

'சிந்திக்க கனவு தடை கல்லாகியது.'

-மஞ்சுதேவன், பெங்களூரு.

(சென்னை தாம்பரத்தில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது...)

'வாழ்க்கை என்பது கிரிக்கெட் மேட்ச். நாம் ரன் எடுக்க ஒருவர்தான் உதவுவார். ஆனால், 11 பேர் தடுப்பார்கள்.'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

கேட்டது

(விருதுநகரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர்கள் இருவர்...)

'இந்த வண்டி எவ்ளோ குடுக்குது?'

'அது எங்கே கொடுக்குது... தினமும் நான்தான் பெட்ரோல் பங்க்காரங்களுக்குத் தர்றேன்!'

-ஏ.எஸ்.ராஜேந்திரன், விருதுநகர்.

(சென்னை மெரீனா பீச்சில் காதலர்கள் பேசியது...)

'டியர்... கல்யாணத்துக்குப் பிறகும் இந்த அன்பு நிலைக்குமா?'

'அது நமக்கு அமையப்போற துணையைப் பொறுத்தது!'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

(கோவையில் துணிகள் தைக்கும் கடை ஒன்றில்...)

'ஜாக்கெட்டுக்குப் பின்னாடிதான் ஜன்னல் வைப்பாங்க... நீங்க ரெண்டு கைகளிலும் ஜன்னல் வைக்கச் சொல்றீங்க?'

'எனக்கு வாஸ்துப்படி பக்கவாட்டில் இருந்துதான் அதிர்ஷ்டம் வருமாம்... அதுக்குதான் இப்படி!'

-ரத்னம் மரகதம், கோவை-15.

யோசிக்கிறாங்கப்பா!

'பணிந்தவன் எல்லாம் பயந்தவன் அல்ல'

-எ.எம். மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

மைக்ரோ கதை

கிராமப்புறக் கோயில் ஒன்றில் பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வழிபட வந்த நாகராஜனை பார்த்துவிட்டு, பக்தர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் அவர் பூஜாரியிடம், 'சிவனேன்னு நான் வேப்பமர நிழலில் இளைப்பாறுகிறேன்.

என்னைக் கண்டு அங்கே புற்றுக்கு பால் வார்க்கும் பெண்கள் மிரண்டு, அரண்டு ஓடுறாங்களே... எதுக்கு பூஜாரி?' என்றார். இதற்கு பூஜாரியோ, 'நல்ல பாம்பு உன் தலை மீது ஏறி நின்று படமெடுத்து ஆடுது! நல்லா பாருய்யா! ' என்று சொல்ல, நாகராஜனும் மிரண்டு ஓடினார். ஓடிய வேகத்தில் பாம்பும் தலையில் இருந்து கீழே விழுந்து நாகராஜனை துரத்தத் தொடங்கியது.

-எஸ்.தியாகராஜன், சென்னை-118.

எஸ்எம்எஸ்

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

-பெ.பார்வேந்தன், சென்னை-125.

அப்படீங்களா!

பொழுதுபோக்குக்காகத் தகவல் பரிமாற்றத்துடன் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் இன்று முக்கிய தகவல்கள் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. அதுவும், எழுத்து, புகைப்படம், விடியோ என பல்வேறு வடிவில் தகவல்களை அனுப்பும் வகையில் மேம்பட்டுள்ளது.

இதில் அனுப்பப்படும் சாட் மேசேஜ்கள் ஆங்கிலத்தில் இலக்கண பிழையில்லாம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றம் செய்ய உதவும் புதிய சேவை தற்போது அறிமுகமாகி உள்ளது.

ஒருமுறை எழுதப்பட்ட மேசேஜை வழக்காடு மொழியிலாகவோ, சகஜ நடையிலோ, இலக்கண பிழை இல்லாத ஆங்கில நடையிலோ மாற்றம் செய்ய இந்த புதிய முறை உதவுகிறது.

இதற்காக வாட்ஸ்ஆப் சாட்டில் பதியப்பட்ட மேசேஜில் உள்ள புதிய பென்சில் வடிவிலான படத்தை தேர்வு செய்து தேவையான நடையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

எனினும், வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்யப்படும் மேசேஜ்கள் தனி உரிமை பாதுகாப்புடன் வேறு யாரும் படிக்காத வகையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com