எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாக் பக்ரி

'வாக்' என்பதற்கு குஜராத்தி மொழியில் 'புலி' என்றும், 'பக்ரி' என்பதற்கு 'ஆடு' என்றும் பொருள்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 7:34 pm IST

முனைவர் குமார்

'வாக்' என்பதற்கு குஜராத்தி மொழியில் 'புலி' என்றும், 'பக்ரி' என்பதற்கு 'ஆடு' என்றும் பொருள். 'வாக் பக்ரி' நிறுவனத்தின் விளம்பரச் சின்னத்தில் ஒரு புலியும் ஆடும் தேநீர்க் கோப்பையில் வாய் வைப்பது போலக் காட்சி உள்ளது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வணிக விற்பனையைத் தாண்டி 'வாக் பக்ரி' இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

நரந்தாஸ் தேசாய் என்பவர் 1892-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 500 ஏக்கரில் டீ எஸ்டேட்டை முதலில் நிறுவினார். வியாபாரம் தழைப்பதாகத் தோன்றினாலும், அங்கு நிலவிய நிறவெறியால் இந்தியர்களுக்கு வணிகம் செய்வது ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது. பல ஆண்டுகள் போராடியும் வியாபாரத்தில் தொய்வே ஏற்பட்டது. எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பினார்.

அந்த நாள்களில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வியாபாரத்தைத் தொடங்க பெரிய மனிதர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் பெரிதாக மதித்தது சுதந்திர இந்தியாவுக்காகப் பாடுபட்ட காந்தியடிகள் போன்றவர்களைத்தான்.

காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்தவர். தேசாய் அத்தகைய கடிதத்தை அவர் உயர்வாய் மதித்து வந்த காந்தியடிகளிடம் பெற்றார். பின்னர், தேசாய் தனது அலுவலை அகமதாபாத்தில் 1915-இல் தொடங்கினார். இவர் மனிதர்களிடையே பிரிவினை இருக்கக் கூடாது என உறுதியாக நம்பியதோடு, வணிகமும் கொள்கைப் பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியவர்.

சமத்துவத்தை விற்பனை விளம்பரத்தில் காட்டுவது எப்படி? அனைவரையும் ஒன்றாக ஈர்த்து தேநீரைப் பருக வைப்பது எப்படி? தேநீர் கம்பெனியின் பெயரும் விற்பனைச் சின்னமும் எப்படியிருக்க வேண்டும்? என்றெல்லாம் நன்கு ஆராய்ந்தே நரந்தாஸ் தேசாய் தனது தேநீர் கம்பெனிக்கு ' வாக் பக்ரி' என்ற பெயரை வைத்தார். விளம்பரச் சின்னமும் அதற்கு தகுந்தபடி பொறிக்கப்பட்டது. இன்றும் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

'விற்பனைத் துறையின் குரு' என்று அழைக்கப்படும் பிலிப்ஸ் கோட்லர் என்பவர் 'மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்' என்கிற விற்பனை மேலாண்மையில் நூலை எழுதியவர். விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு அகராதியைப் போன்ற இந்த நூலில், 'வாக் பக்ரி' நிறுவனம் குறித்து மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.