எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

குழந்தைகள் வடிவமைப்பு

தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது. பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றுகூட தொழில்நுட்பம் கொண்டு அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 4:11 am IST

முனைவர் ஜி.குமார்

தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது. பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றுகூட தொழில்நுட்பம் கொண்டு அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

நியூக்லியஸ் என்று ஒரு கம்பெனி. பிறக்கும்போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டுமா... மாநிறமாக இருந்தால் போதுமா? முடி சுருண்டிருக்க வேண்டுமா அல்லது அடர்த்தியாக இருந்தால் போதுமா? குழந்தையின் உயரம் எப்படியிருக்க வேண்டும்? குழந்தையின் கண்கள் கருமையாக இருக்க வேண்டுமா அல்லது நீல நிறத்தில் வேண்டுமா? இப்படி பல வடிவமைப்புகளை தம்பதிகளுக்குப் பிடித்ததுபோல் செய்யத் தயாராக இருக்கிறது.

தம்பதியரின் டி.என்.ஏ. எனப்படும் மரபணுக்களிலிருந்து சுமார் 1520 எம்பிரையோ எனப்படும் கருமுட்டைகளை உருவாக்குகிறார்கள். அது குழந்தைக்கருவின் முதல் கட்டம். அவற்றை ஆராய்ச்சி செய்து, பிறக்கப் போகும் குழந்தை எப்படியிருக்கும் என்ற அட்டவணை தயார் செய்கிறார்கள். அந்த அட்டவணை அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் வளர்ந்தபின் எப்படியிருக்கும் என்பதை படம் போட்டுக்காட்டுகின்றன.

ஏன்... குழந்தைகளுக்கு எந்த நோய்கள் வரலாம் என்பது வரை அந்த அட்டவனை விவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அட்டவணையிலிருந்து, எந்தக் கருமுட்டையிலிருந்து குழந்தை பிறந்தால் அவர்களுக்குப் பிடித்தமாக இருக்கும் என்பதை தம்பதியர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சேவைக்கு நியூக்லியஸ் கம்பெனி சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கத் தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.