அழகான மலர் வயல்கள்
கடவுள் வழிபாட்டில் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆடை, அணிகலன்கள் அணிவித்தாலும், பூக்களால் கடவுளுக்குச் செய்யப்படும் அலங்காரம்தான் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.


கடவுள் வழிபாட்டில் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆடை, அணிகலன்கள் அணிவித்தாலும், பூக்களால் கடவுளுக்குச் செய்யப்படும் அலங்காரம்தான் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இதேபோல், பூச்சூடுவது பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும்.
'பூவே பூச்சூடாவா...', 'உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்..', 'பூ பூக்கும் ஓசை.. அதைக் கேட்கத்தான் ஆசை...', 'பூவே.. செம்பூவே..' என்றெல்லாம் அழகான பூக்களை மையப்படுத்தி, தமிழ்ப் பாடல்கள் ஏராளம். உலகிலேயே மிகவும் அழகான பூக்களையும், அவை அமைந்துள்ள இடங்களையும் அறிவோம்.
க்யூகென்ஹாஃப், நெதர்லாந்து
லிஸ்ஸில் அமைந்துள்ள 'ஐரோப்பாவின் தோட்டம்' என அழைக்கப்படும் இந்தப் பூங்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான துலிப்ஸ், டாஃபடில்ஸ், ஹைசின்த்ஸ் உள்ளிட்ட பூக்கள் பூத்துக்குலுங்கும் அற்புதக் காட்சிகளைக் காணலாம். மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் துலிப் பண்ணைகளாக மாறுகின்றன.
ஃப்ரானோ, ஹைக்கைடோ, ஜப்பான்
ஃப்ரானோவின் சரிவு லாவண்டர் வயல்கள் ஜப்பானின் கோடைக்கால அடையாளம். ப்ரோம்போமிட்டா போன்ற பண்ணைகள் தொலைதூர மலைகளுக்கு எதிராக ஊதா இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறப் பூக்களின் பட்டைகளை உருவாக்குகின்றன. நேர்த்தியாக இந்த மலர் வரிசைகள் உள்ளன. லாவண்டர் சார்ந்த தயாரிப்புகளும் நடைபெறுகிறது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் இவற்றைப் பார்வையிட உகந்தவையாகும்.
புரோவென்ஸ், பிரான்ஸ்
ஒவ்வொரு கோடையிலும் புரோவின்சின் கிராமங்கள் ஊதா நிற அலைகளாக மாறும். வலன்சோல், சால்ட் போன்ற கிராமங்களில் லாவண்டர் வயல்கள் பூக்கின்றன.
தங்கக்கல் மேடுகள், சூரியகாந்தித் திட்டுகள், திறந்த வானம் ஆகியவை காட்சியை வடிவமைக்கின்றன. அதிகாலையிலும், சூரிய மறைவின்போதும் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலும், ஜூலை மாதத்திலும் பார்த்து ரசிக்கலாம்.
அன்டேலோப் பள்ளத்தாக்கு, கலிபோர்னியா
காட்டுப்பூக்களின் பருவத்தில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வெடிக்கும். மழைக்காலம் சாதகமாக இருக்கும்போது, பாப்பிகள் மலைச்சரிவுகளில் அடர்த்தியான நிறத்தில் மூடும். பெரும்பாலும் லூபின்கள், தங்க வயல்களுடன் சேர்ந்து இருக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பார்த்து ரசிக்கலாம்.
ஹிட்டாச்சி கடற்கரைப் பூங்கா, ஜப்பான்
வசந்த காலத்தில் நீல நிற நெமோபிலா பூக்கள் பூத்து மிகாராஷி மலையை பனியால் மூடுகின்றன. இது பார்ப்பதற்கு கடல்போல் இருக்கும். இலையுதிர்காலத்தில் நீல நிறத்தை உமிழும் சிவப்பு கோச்சியா பூக்கள் புதர்களாய் மாற்றுகிறது. ஆண்டு முழுவதும் பூக்கள் பூத்துக்குலுங்கினாலும் ஏப்ரல், மே மாதங்கள் பார்த்து ரசிக்க சிறந்த மாதங்களாகும்.
பூக்களின் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, இந்தியா
உத்தரகாண்டில் சமோல் மாவட்டத்தில் இமய மலைப் பகுதியில் உள்ள இந்தப் பூங்காவில் மழைக் காலங்களில் அரிய ஆர்க்கிட்டுகள், பாப்பிகள், ப்ரிமுலாக்கள் ஆகிய மலர்கள், பனி சிகரங்கள், மிதக்கும் மேகங்கள் பின்னணியில் மலர்கின்றன. இதைப் பார்வையிட மலையேற்றம் அவசியம். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் பார்வையிடலாம்.
நமகுவலாந்து, தென்ஆப்பிரிக்கா
ஆண்டில் பெரும்பாலான நாள்கள் வறண்டதாகவும், தரிசாகவும் இருக்கும். குளிர்கால மழைக்குப் பின்னர், ஆரஞ்சு, இளம்சிவப்பு, மஞ்சள், வெள்ளை வனப் பூக்களால் பூக்கம்பளமாக மாறுகிறது. வறண்ட இடத்தில் பூக்கள் அதிகமாக மலர்வது ஆப்பிரிக்காவில் அசாதாரணமாகும். ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான மாதங்களில் பார்த்து ரசிக்கலாம்.
லூபிங், சீனா
வசந்த காலத்தின் தொடக்கத்தில் லூபிங்கின் சரிவு மலைகள் ராப்சீட் கனோனா பூக்களால் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் ரசிக்க உகந்தவை.
கேஸ்டெல்லா செலோ டி நார்சியா, இத்தாலி
பாப்பிகள், சோளப்பூக்கள் பூத்துக் குலுங்கும். உயரமான அமைப்பும், அடுக்கு வண்ணங்களும் பார்வையை ஈர்க்கும். ஜூன், ஜூலை மாதங்கள் ரசிக்க உகந்தவை.
ஸ்காகிட் பள்ளத்தாக்கு, வாஷிங்டன், அமெரிக்கா
துலிப் திருவிழாவுக்குப் பெயர் பெற்ற ஸ்காகிட் பள்ளத்தாக்கில் ஏப்ரல் மாதத்தில் சிவப்பு, மஞ்சள், இளம்சிவப்பு துலிப் மலர்களின் துடிப்பான வரிசைகளாக மாறும். தூரத்தில் பனி மூடிய மலைகள், வண்ணமயமான மலைகள் சேர்ந்து வட அமெரிக்காவின் மிகவும் அழகிய வசந்த காலத்துக்குப் பயணிக்கலாம். ஏப்ரலில் பார்த்து ரசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...