நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புரட்சிகரமான கண்டுபிடிப்பு!

தகவல் தொடர்பு, ஒளியியல், மருத்துவம், வானியல் ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பத்தில் லேசர் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திவருகிறது.

News image
Updated On :2 மே 2026, 10:48 pm

தகவல் தொடர்பு, ஒளியியல், மருத்துவம், வானியல் ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பத்தில் லேசர் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திவருகிறது. இந்த லேசர் தத்துவம் மற்றும் கோட்பாடு குறித்து பலர் ஆய்வு செய்தனர். அவர்களில் குமார் படேல் முக்கியமானவர்.

விளக்குகளில் லேசர் ஏற்படுத்திய தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரிக்கத் துவங்கியது. கண்ணுக்கு விருந்தளிக்கும் அதன் ஒளி வெள்ளம் இருளை விரட்டி இன்பம் சேர்ப்பவை.

முதன் முதலில் 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் ஹெச். மைமன் என்பவர் ரூபி தண்டைக்கொண்டு செனான் ஒளி பாய்ச்சும் விளக்கின் மூலம் அணுக்களை கிளர்ச்சியுற்ற நிலைக்குத் தூண்டி, பயன்பாட்டு லேசர் ஒளி உமிழ்வு செயல்பாட்டை உருவாக்கினார்.

கடந்த நூற்றாண்டில் புரட்சிகரமான கண்டுபிடிப்பான லேசர் ஒளியின் உருவாக்கத்துக்குப்பிறகு பல்வேறு வகையான லேசர் கருவிகளை வடிவமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

லேசர் தத்துவம் மற்றும் கோட்பாட்டு ரீதியில் ஆய்வுகள் பல விஞ்ஞானிகளால் மும்முரமாயின. பலர் திடநிலை லேசர் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது வாயு நிலை லேசர் குறித்த ஆய்வை குமார் படேல் தொடங்கினார்.

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் விஞ்ஞானி குமார் படேல், கார்பன் டை ஆக்ஸைடு மூலம் இயங்கும் லேசரை வடிவமைத்து, உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தார். அவர் உலகின் பிரபல ஆய்வு நிறுவனமான எ.டி.&டி.பெல் ஆய்வகத்தில் 1961-இல் பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து 30 ஆண்டுகள் தன்னுடைய பங்களிப்பை வழங்கினார். 1964-இல் மூலக்கூறுகளுக்கு இடையே ஏற்படும் அதிர்வு மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நைட்ரஜன் கார்பன் டை ஆக்ஸைடு லேசரை கண்டுபிடித்தார். இது அதிக சக்தி வாய்ந்த லேசர் கதிர்களை தொடர்ந்து வெளியிடும் ஆற்றல் பெற்றது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் நவீன அதிதிறன் லேசர், உலகின் பயன்பாட்டு நடைமுறைக்கு வந்தது.

சரி, குமார் படேல் யார்?

1938-இல், இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரமத்தி என்கிற ஊரில் பிறந்தார் குமார் படேல். இவரது இயற்பெயர் சந்திர குமார் நரன்பாய் படேல். இவரது தந்தை இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்த பொறியாளர், மூத்த சகோதரர் மருத்துவர், இளைய சகோதரி உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.

புனே பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற இவர், அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் மற்றும் டாக்டர் பட்டம் ஆகியவற்றை மின்பொறியியல் பாடத்தில் பெற்றார்.

சிறு வயதில் மரச்சாமான்கள் செய்ய அத்தொழிலார்கள் ரம்பத்தைக் கொண்டு மரங்களை அறுப்பதில் இருந்த சிரமத்தைக் கண்டிருக்கிறார். அக்காட்சி மனதில் பதிந்திருந்ததால் தான் கண்டுபிடித்த கார்பன் டை ஆக்ஸைடு லேசரைப் பயன்படுத்தி பொருள்களை வெட்டும் முயற்சியைத் தொடர்ந்தார்.

இவ்வகை லேசர் தொழிற்துறையில் உலோகங்களை இணைத்துப் பற்றவைப்பதற்கும், கடினமான வைரம் முதல் மென்மையான வடிகட்டி வரை அனைத்துப் பொருள்களையும் வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் பல்வேறு அறுவைச்சிகிச்சை, கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சைமுறைகளுக்கும் பயன்படுகிறது.

காலநிலை அறிதல், வளிமண்டல மாசுக்களை அடையாளம் காணுதல், ஒளிமின் கருவிகள் பயன்பாடு, ராணுவ உபயோகம், நேரியல்சாரா ஒளியியல், சக்தி வாய்ந்த கண்ணாடியிழை வழியான தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்த வகை லேசர் சிறப்பாகச் செயல்படுகிறது.

இவரது லேசர் கண்டுபிடிப்புகளால் ராமன் நிறமாலை புத்துணர்வு பெற்று, அடுத்த பரிணாமத்திற்குச் சென்றது. குவாண்டம் மின்னணுவியலில் இவரது பங்களிப்பு கணிசமானது. பின்னாளில் எ.டி. & டி. பெல் நிறுவனத்தின் இயக்குநர் பதவி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அமெரிக்க இயற்பியல் கழகத்தில் தலைவர் போன்ற உயரிய பொறுப்புகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார்.

அடால்ப் லோம்ப் பதக்கம், ஸ்டுவர்ட் பல்லாண்ட்டின் பதக்கம், சார்லஸ் ஹார்ட் டெளன்ஸ் பதக்கம், தாமஸ் ஆல்வா எடிசன் விருது, அமெரிக்க இயற்பியல் கழகத்தின் பாகே பரிசு போன்ற அமெரிக்காவின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.