ஹோா்முஸ் நீரிணையை ஈரான் வரும் புதன்கிழமை(ஏப். 8) அதிகாலை 5.30 மணிக்குள் (இந்திய நேரப்படி) திறக்க தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று பகிரங்க எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, “இன்றிரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளப் பக்கத்தில் இன்று (ஏப். 7) பதிவிட்டு ஈரானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், ஹங்கேரி சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ், தலைநகர் புதாபெஸ்ட் நகரில் பேசியதாவது, “இன்றிரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி) ஈரானால் ஒரு முடிவை எடுக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.எங்களிடம் சில கருவிகள் (ஆயுதங்கள்) பட்டியலில் உள்ளன. அவற்றை நாங்கள் இதுவரை பயன்படுத்த முடிவெடுக்கவில்லை.
அவற்றை பயன்படுத்த அதிபர் டிரம்ப் தீர்மானம் எடுக்கலாம்! ஒருவேளை ஈரானியர்கள் தங்களது இதே நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் டிரம்ப் அந்தக் கருவிகளைப் பயன்படுத்த முடிவெடுப்பார்.
நாங்கள் கார்க் தீவில் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறோம். ஈரானியர்கள் ஒரு முன்மொழிவை ஏற்று முடிவெடுக்கும் வரை, எந்தவொரு எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளையும் குறிவைக்க மாட்டோம். ” என்றார்.
Summary
Vice President of the US, JD Vance says, "We hope that Iran can make a decision by 8 PM tonight”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



