பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!

ஈரான் உடன் அமைதிப்பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வது குறித்து...

News image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் - கோப்புப் படம் | AP

Updated On :25 ஏப்ரல் 2026, 11:57 am IST

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) இரவு அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் ஆகியோர் இன்று பாகிஸ்தான் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானில் நடைபெற்று தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லீயாவிட் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்வில் அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாக ஈரானிய அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை மேற்கொள்ளமாட்டார் எனவும், போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகளை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிப்பார் எனவும் ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

இத்துடன், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது.

இதையடுத்து, கடந்த ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 3 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

U.S. delegation is traveling to Pakistan, to hold peace talks with Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.