எங்களுக்கு அவசரமும் இல்லை; ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை: டிரம்ப்
அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்
வாஷிங்டன்: அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும் இல்லை; எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
அமெரிக்கா "மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது" என்று கூறிய டிரம்ப், தனது நிலைப்பாட்டை விளக்கும்போது ஈரானில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் இந்தப் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறோம். அவர்களுக்கு (ஈரான்) கடுமையான பணவீக்கம் உள்ளது, அவர்களுடைய பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது, அவர்கள் மக்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். போராடும் மக்களையும் கொன்று குவிக்கிறார்கள் என்றார்.
ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப எவ்வளவு கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்தற்கு, "எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை, நான் அவசரப்படவும் இல்லை; அவர்களுக்கு எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை" என்று டிரம்ப் கூறினார்.
ராணுவத் தாக்குதல்களைவிடப் பொருளாதார நடவடிக்கைகள் அதிகயளவில் பலனளிக்கின்றனவா? என்று கேள்விக்கு, "இரண்டுமே பலன் அளிப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
இதற்கிடையே, போர் பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கவும் ஈரான் அதிகாரிகளைச் சந்திக்க கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி வியாழக்கிழமை தெஹ்ரான் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர பேச்சுவார்த்தையே கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் சிறந்த வழியாகும் என்ற கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தப் பயணம் அமைகிறது என்று அல் அன்சாரி கூறியுள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பிப்ரவரி 28-க்கு முந்தைய நிலைக்கு அது திரும்ப வேண்டிய அவசியம் குறித்தும் இந்த விவாதங்கள் அமையும் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 28 அன்று வாஷிங்டன் தெஹ்ரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலைத் தணிக்க கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஈடுபடும் புதிய ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்தக் கருத்துகளும் பயணமும் இடம்பெறுகின்றன.
இதற்கிடையில், நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளின் போது கடுமையான காயங்களுக்கு ஆளான போதிலும், ஈரானின் உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தற்போதைக்கு ஈரானுக்கு எதிராக புதிய ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று பல நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க - ஈரான் மோதலைத் தணிக்கும் முயற்சிகளில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் முக்கிய ராஜதந்திர மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
United States President Donald Trump said he has no fixed timeline for Iran to return to the negotiating table to end the conflict with Washington
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





