தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும்: டிரம்ப்

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப்

அதிபர் டொனால்ட் டிரம்ப். - ஏபி

Published On :

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் போர் தொடங்குவதற்கு முன் உள்நாட்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதிப்பது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ஈரான் மீதான டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக ஊடகப் பதிவில், “வீழ்ச்சியடைந்து வரும் ஈரான் தனது ராணுவத்தின் பெரும்பாலான பிரிவினருக்கு ஊதியம் வழங்கவில்லை. அதேநேரம், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாத நேரத்திலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களை ஈரான் கொன்று குவித்து வருகின்றது.

இது மிகப்பெரிய மனித உரிமைக்கு எதிரான செயல். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஈரானில் பெருமளவில் நடைபெற்ற உள்நாட்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட சில வாரங்களில் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தாக்குதல்களைத் தொடங்கினர்.

அங்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் அரசு மீதான அதிருப்தி காரணமாக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. அவை, ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் உச்சமடைந்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க ஈரான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நிலையில், 3,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரங்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்களே ஈரான் குற்றம் சாட்டியிருந்தது.

ஈரான் போராட்டக்காரர்களுக்கு தொடர்ந்து மரண தண்டனை அளிப்பதை கடுமையாக கண்டித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இம்மாதத்தின் தொடக்கத்தில் கடிதம் எழுதினர். ஆனால், அமெரிக்காவில் மரண தண்டனை முறை இன்னும் நடைமுறையில் உள்ளதால் அவர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

Summary

Donald Trump has stated that the imposition of the death penalty on protesters in Iran must stop.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.