தூய்மையான நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்குத் தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆலன், பேஸில் ஆகிய மூன்று நண்பர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் அக்கறையுடன் தொடங்கிய தேடலால் 100 சதவீதம் மக்கும் தன்மையுள்ள பாட்டில்களை உருவாக்கும் 'பக்வா' என்ற பிராண்டை உருவாக்கியுள்ளனர்.
'இயற்கையாக மக்கும் 100% தாவர அடிப்படையிலான மக்கும் பாட்டில்களை வழங்குவதன் மூலம் குளிர்பானத் துறையிலிருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதே எங்கள் நோக்கம். எதிர்வரும் தலைமுறையினருக்குத் தூய்மையான, ஆரோக்கியமான பூமியை அளிப்பதே எங்கள் நோக்கம்'' என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து அஸ்வின் கூறியது:
'நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் டன் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் உருவாகின்றன. அவை இறுதியில் ஆறுகள், கடல்கள், விவசாய நிலங்களை மாசுபடுத்துகின்றன.
பிளாஸ்டிக் அல்லது பெட் பாட்டில்கள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் அல்லது பெட் தண்ணீர் பாட்டிலில் 2.4 லட்சம் வரையிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போதும், அவை உடலுக்குள் நுழைய அதிகம் வாய்ப்பு உண்டு.
இதற்கு மாற்றே 'பக்வா' பாட்டில்கள். 'சட்'டென்று பார்த்தாலும், நின்று நிதானமாகப் பார்த்தாலும், எங்களது 'பக்வா' பாட்டில்கள் சாதாரண பெட் பாட்டில்கள் போன்றே தோற்றம் அளிக்கும்.
கரும்புச் சக்கை, சோள மாவில் இருந்து பெறப்படும் தாவர அடிப்படையிலான பயோ பிளாஸ்டிக்கான பாலிலாக்டைடில் இருந்து இவை தயாரிக்கப்படுகின்றன.
நீடித்து உழைக்கக் கூடியவை. சூடான, குளிர்ந்த பானங்கள் இரண்டுக்கும் ஏற்றவை. மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவித மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் முற்றிலும் இல்லாதவை.
180 நாள்களுக்குள் மக்கிவிடுவதால், 'பக்வா' பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. பாட்டிலில் போடப்படும் மூடி, ஒட்டப்படும் லேபிள் கூட மக்கக்கூடியவை. ஒரு லிட்டர் 'பக்வா' பாட்டில் 30 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகிறது. 250 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளில் பக்வா பாட்டில்கள் கிடைக்கின்றன.
'பக்வா' பாட்டில்களை பிரபலப்படுத்தவும், பயன்பாட்டைப் பெருக்கவும், 'இலவச நீர்த் திட்டம்' என்ற ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில், சில நிறுவனத்தினர் பாட்டில்களின் உற்பத்திச் செலவை ஏற்றுக் கொள்கின்றனர். பாட்டில் லேபிள்களில் அந்த நிறுவனங்களின் விளம்பரம் அச்சிடப்படும். ஆறு மாதங்களுக்குள், 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க, தாவர அடிப்படையிலான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், மத்திய அரசு நிறுவனமான சி.ஐ.பி.இ.டி. யால் 'பக்வா' அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு ஆணையத்தின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது'' என்கிறார் அஸ்வின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

