திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :30 மார்ச் 2026, 1:40 am IST

வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சமோசா சௌக் அருகே, செக்டா்5-இல் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட நடவடிக்கையாக, மூன்று தண்ணீா் டேங்கா்களும் இரண்டு தண்ணீா் பவுசா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் தீவிரத்தன்மை காரணமாக மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.