விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புள்ளிகள்

நூலாசிரியர், உரையாசிரியர், ஞானாசாரியர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர் என்று வள்ளலார் அனைத்துத் துறைகளிலும் ஆசிரியராகத் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நூலாசிரியர், உரையாசிரியர், ஞானாசாரியர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர் என்று வள்ளலார் அனைத்துத் துறைகளிலும் ஆசிரியராகத் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

சர்தார் வல்லபபாய் படேலிடம் ஆங்கிலேயர் ஒருவர் நையாண்டி செய்யும் நோக்கத்தில், 'உம்முடைய கல்சர் (கலாசாரம்) என்ன?' என்று கேட்டார். அதற்கு படேல், 'என்னுடைய கல்சர் அக்ரிகல்சர் (விவசாயம்)' என்றார். அந்த ஆங்கிலேயர் அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒருமுறை ஏ.கே. செட்டியாரிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகைச்

சுவையாக, 'உங்கள் தமிழ்நாட்டு மிளகு ரசம் அற்புதம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் தமிழ்நாட்டு ரசத்தை தேசிய பானமாக அறிவிக்கப் போகிறேன்' என்றார்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

தமிழ்த் திரைத்துறையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அண்மையில் நிகழ்ச்சியொன்றில், 'சிறுவயதில் இருந்தே நான் பாடல்களை இயற்றி, சேமித்து வைத்திருக்கிறேன். அந்த வகையில் என்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. எதிர்காலத்தில் அதில் எது சிறந்தவையோ அதை சூழ்நிலைக்குத் தக்கவாறு எடுத்துப் பயன்படுத்திக் கொள்வேன். சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். அதற்காக நான் 'ஸ்மார்ட் போன்' அல்லாத, சாதாரண கைப்பேசியையே பயன்படுத்துகிறேன். இதனால் தேவையில்லாத பிரச்னைகளில் இருந்து விலகி நிற்கிறேன்' என்றார்.

'ஒருநாள் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சிவகிரியில் பணிபுரிந்து வந்த எனது மூத்த மகன் திவாகரின் குடும்பமும் வந்தது. அன்று ஸ்டேட் பாங்க் அதிகாரி ராமமூர்த்தியும் வந்திருந்தார். அவர் எங்களுக்கு நீண்ட அறிவுறுத்தல்களை வழங்கினார்.

'என்றைக்கு இருந்தாலும் இந்த விவசாயம் உங்களை காலைவாரி விட்டுவிடும். கி.ரா. எழுதி ஒன்றும் சம்பாதிக்க முடியாது. பின்னர், 'தார்க் குச்சி'யும் பயன்படாது. எழுதுகோலும் பயன்தராது. எழுத்து கி.ரா.வுக்கு ஓங்கிய புகழை மட்டுமே அளிக்கும். வாய்ப்பு வரும்போது தொழில் மட்டும்தான் கைகொடுக்கும். உங்கள் வீட்டின் மரப்பெட்டிக்குள் பயன்தராமல் இருக்கும் நிலப்பத்திரங்கள், நகைகளைக் கொண்டு வாருங்கள். வங்கி சரிபார்த்து வாங்கி அடமானத்துக்கு வைத்து, உங்களுக்கு ஒரு டூரிஸ்ட் வேன் வாங்கிக் கொடுக்கும். அதில் சம்பாதிக்கலாம்' என்றார் ராமமூர்த்தி.

முதலில் திவாகர் சம்மதித்தார். ஒருவர் பின் ஒருவராக எல்லோரும் சம்மதித்தோம். இப்படிதான் எங்கள் வீட்டின் முன் 'பவுடர் ப்ளு' வண்ணத்தில் புத்தம்புது டூரிஸ்ட் வேன் நின்றது. இந்த வேன் அளித்த வருவாயில் பைசா செலவளிக்காமல், வட்டியும் அசலுமாக வங்கிக் கடனுக்குச் செலுத்தினோம். இரண்டே ஆண்டில் கடன் முழுவதும் அடைந்தது. பத்திரங்களையும், நகைகளையும் திருப்பிவிட்டோம். மூன்றாவது ஆண்டில் அந்த வேனை ரூ.80

ஆயிரத்துக்கு விற்றோம். அந்த வேனை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தோம்' என்று 'கதை சொல்லி' எனும் சிற்றிதழில் கி.ரா. எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

அருமையான சொல் அமைப்பும் நகைச்சுவை சாயலும் நீதி உரைப்பதுமான பாடல்களைப் பாடுவதில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்குத் தனிச்சிறப்புண்டு.

அவர் ஒருமுறை தனது மனைவி அருகில் அமர்ந்திருக்கும்போது, பாட ஆரம்பித்தார். முதல் அடியை எழுதிக் கொண்டே பாடினார். அந்த அடியைக் கேட்ட அவரது மனைவி திடுக்கிட்டு வியந்தார்.

'மாதரை நினையாதே' என்பதுதான் அந்த முதல் அடி. அதைக் கேட்ட அம்மையார், 'நான் இருக்கும்போதே இப்படியானால் என் நிலைமை என்ன ஆவது?' என்றார்.

உடனே வேதநாயகம் பிள்ளை சிரித்துக் கொண்டே அந்த இரு சொற்களுக்கும் பக்கத்தில் ஒரு சிறிய கோடு போட்டு, இரண்டு எழுத்துகளாலான வேறு சொல்லை வைத்து, மனைவியை வியப்படையச் செய்தார். 'மாதரை நினையாதே... மறுமாதரை நினையாதே!' என்று அவர் செய்ததாகும். இரண்டே எழுத்துகளைச் சேர்த்து அமைத்துக் காட்டிய புலமைமிக்கவர் வேதநாயகம்பிள்ளை.

(விழா ஒன்றில் திருக்குறளார் வீ.முனுசாமி பேசியது)

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.