இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற அமைப்பும், முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டு பழமையான அறிவியல் கழகமுமான 'பிரிட்டானிய ராயல் சொசைட்டி'யின் உறுப்பினராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் செளம்யா சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார். 1660-இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது, இங்கிலாந்து அரசுக்கான அறிவியல் ஆலோசனைகளை அளிக்கிறது. இந்தப் பொறுப்பை வகிக்கும் 'தமிழ்நாட்டின் முதல் பெண் விஞ்ஞானி' , 'இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி' என்ற பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த செளம்யா, விலங்கியல் மருத்துவராக விரும்பினார். தோழிகள் 'எம்.பி.பி.எஸ்.' படிக்க விரும்பியதால், செளம்யாவும் மருத்துவம் படித்தார். காச நோயாளிகளைத் தேடி, குடிசைப் பகுதிகளுக்குச் சென்று வந்தார். தற்போது செளமியாவுக்கு அறுபத்து ஏழு வயதாகிறது.
இவர் தனது மருத்துவர் பட்டத்தை ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரியிலும், முதுகலை மருத்துவப் பட்டத்தை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் முடித்தார். சிசுர் ஒகத்லம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை சுவாச நோய் நிபுணராகவும், முனைவர் பட்ட மருத்துவ ஆய்வாளராகவும் பணிபுரிந்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் செளம்யா சுவாமிநாதன் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார். செளம்யாவின் தந்தையும் பசுமைப் புரட்சியின் தந்தையுமான எம்.எஸ்.சுவாமிநாதனும் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். மருத்துவ விஞ்ஞானியும் தடுப்பூசி நிபுணருமான ககன்தீப் காங், அந்த அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
இதேபோல், அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியான டாக்டர் லலிதா ராமகிருஷ்ணன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகியுள்ளார். இவர் காசநோயை உருவாக்க, பரவக் காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக எண்ணற்ற ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
லலிதா ராமகிருஷ்ணன்
லலிதா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு, தொற்று நோய்கள் பேராசிரியராக உள்ளார். 1983-இல் வதோதராவில் உள்ள பரோடா மருத்துவக் கல்லூரியில் லலிதா மருத்துவப் பட்டம் பெற்றார். 1990-இல் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
டஃப்ட்ஸ்-நியூ இங்கிலாந்து மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவ உறைவிடத் திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்ற லலிதா, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் காசநோய் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக மைக்கோபாக்டீரியம் மிரோனியை மாதிரியாகப் பயன்படுத்தினார்.
2015-இல் லலிதா ராமகிருஷ்ணன் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959-இல் பரோடாவில் பிறந்த லலிதாவின் மூத்த சகோதரர் வெங்கடராமன் ராமகிருஷ்ணன், 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
-தென்றல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சௌமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டி கௌரவம்!
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

விஐடி பல்கலை.யில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடக்கம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


