ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

வாரணாசியில் ரோப் கார்

சகலகலாவல்லி மாலையால் கலைவாணியைப் போற்றிப்பாடி, ஹிந்துஸ்தானி மொழியில் புலமைப் பெற்று, தாரா ஷுகோ என்ற நவாப் மன்னனிடம் காசியில் சைவம் வளர்க்கவும், கேதாரீஸ்வரர் ஆலயத்தைப் புனரமைக்கவும் இடம் கேட்கிறார் குமரகுருபரர்.

Updated On :

பொருநை வளவன்

சகலகலாவல்லி மாலையால் கலைவாணியைப் போற்றிப்பாடி, ஹிந்துஸ்தானி மொழியில் புலமைப் பெற்று, தாரா ஷுகோ என்ற நவாப் மன்னனிடம் காசியில் சைவம் வளர்க்கவும், கேதாரீஸ்வரர் ஆலயத்தைப் புனரமைக்கவும் இடம் கேட்கிறார் குமரகுருபரர். கழுகு பறக்கும் இடம் முழுவதும் தருவதாக மன்னன் வாக்களிக்க, கழுகு பறக்காத காசியில் கழுகு பறக்க; இடம் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு திருமடம் தோன்றியதும், சைவம் வளர்ந்ததும் எல்லாமே வரலாற்று நிகழ்வுகள்.

காசி என்றால் எல்லோருக்கும் குறிப்பிடும்படியான காட்சிகள் சில மனதில் பொதுவாகத் தோன்றும். காசி விசுவநாதரின் கோயில் கோபுரம், அதில் பறக்கும் கொடி, கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகள், வாகனங்களின் ஓயாத இரைச்சல், பழைமையான கட்டடங்கள் எனப் பட்டியிலடலாம். இவையெல்லாமே காசி நகருக்கான அடையாளங்களாகவும், உரிமைகளாகவும், அழகான அம்சங்களாகவும் ஏற்றுக்கொள்ளும் பக்தர்களும் உண்டு.

காசி விசுவநாதரை தரிசிக்கப்போகிறோம் என்கிற பக்தி உணர்வுடன் பயணிக்கும் ஒவ்வொருவரையும் காசி நகரத்தின் சாலைப் போக்குவரத்து நெருக்கடியானது அந்தப் பக்தி உணர்வின்மீது சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆன்மிகச் சுற்றுலாத் தலமான காசியை நாடி வரும் பக்தர்களையும், சுற்றுலா வருபவர்களையும் ஈர்த்து, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் 'வாரணாசி நகர்ப்புற கம்பி வடத் திட்டம்'. அதாவது, வாரணாசி ரோப் கார் திட்டம்.

2023 ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.800 கோடி. மலைப்பிரதேசங்களில்தான் ரோப் கார் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் நகர்ப்புறப் பொது போக்குவரத்துக்கான கம்பி வடத் திட்டம் நடைமுறைக்கு வரஇருக்கிறது.

இது குறித்து வாரணாசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் (இவர் தமிழர்) கூறுகிறார்...

'வாரணாசி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் கண்டோன்மென்ட் என்கிற ஆரம்ப நிலையம் முதல் கோடெளலியா வரை ஐந்து நிலையங்கள்; நான்கு நிறுத்தங்களுடன் இந்தத் திட்டம் செயல்படப்போகிறது. சுவிட்சர்லாந்து நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ள இந்தத் திட்டத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆஸ்திரியாவைச் சேர்ந்த நிறுவனம் கண்காணிக்கிறது. கூடுதலாக ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பொறியாளரும் பாதுகாப்பு அம்சங்களுக்காக கண்காணிப்புப் பணியில் இணைந்துள்ளார்.

முழுமையான அளவில் தன்னிறைவுடன் இருக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், கூடுதல் செலவினங்களைக் கொண்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் பொருள்களை வைத்துக் கொள்ள நிலையத்திலேயே அதற்கான வசதிகளைச் செய்திருக்கிறோம்.

Story image

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது என்னவென்றால், நிறுவப்படும் தூண்களுக்கு, இதன் வழித்தடங்களில் இருக்கும் கட்டுமானங்கள் மட்டுமே, அதிலும் தூண் அமைக்கத் தேவையான அளவுக்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், தனிநபர்களின் சொத்துகளுக்கும் பெரிய அளவில் இடைஞ்சலும் இல்லை. இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தைப் பராமரிக்கவும், செயல்படுத்தவும் ஆகும் செலவுகளுக்கு இதில் தொடர்புடைய நிறுவனங்களே முழுமையாகப் பொறுப்பேற்கும்' என்றார்.

மொத்தம் 3.85 கி.மீ. தொலைவை 16 நிமிடங்களில் கடந்து, கடைசி நிலையமான கோடெளலியாவில் இறங்கினால், காசி விசுவநாதர் கோயிலுக்கு 5 முதல் 10 நிமிடத்தில் நடந்து செல்லலாம்.

வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து சாலை வழியாகப் பயணித்து காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்ல ஆகும் நேரம் 45 நிமிடங்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து காசி நகரம் விடுபடுவதோடு பக்தர்களின் பயண நேரமும் கணிசமாக மிச்சப்படும்.

மொத்தம் 29 தூண்களின் வழியாக இந்த வான் வழிப் பயணம் நடைபெறும். பயணத்தின் உச்சபட்ச உயரம் 55 மீட்டர். ஒரு கன்டோலாவில் (கேபின்) 10 பேர் பயணிக்கலாம். மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேபின்கள் எவ்வளவு வேகமான காற்றையும் சமாளிக்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஏறி அமர்ந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ளும். ஒரு நொடிக்கு 6 மீட்டர்கள் வரை செல்லும் அளவிலான வேகத்தில் இந்த கேபின்கள் பயணிக்கும்.

சுமார் 150 கேபின்கள் தயாராக உள்ளன. ஒரு நேரத்துக்கு ஒரே திசையில் 3,000 பயணிகள்

பயணிக்கலாம். ஒரு நாளில் மொத்தம் 96,000 பயணிகளை காசி விசுவநாதரைத் தரிசிக்க வைக்கக் காற்றில் (கயிற்றில்) மிதந்து செல்ல இருக்கின்றன இந்தக் கேபின்கள். மேலும், இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மட்டுமே என்பதால் இந்த 'ரோப் காரில்' பயணிக்க ஒரு நபருக்கு 50 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெறப்படும்.

வாரணாசி கான்ட் ரயில் நிலையம் எனப்படும் கன்டோன்மென்ட், வித்யாபீத், ரத் யாத்ரா, கிர்ஜா கர் மற்றும் கோடௌலியா செளக் என ஐந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் கிர்ஜா கர் நிறுத்தம் மட்டும் தொழில் நுட்பப் பயன்பாட்டுக்கான நிலையமாக இருக்கும் எனத் தெரிகிறது. அங்கு பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாது.

Story image

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது என்பது மட்டுமல்லாது, இது நடைமுறைக்கு வந்து இதன் செயல்பாடுகளைக் கருத்தில் வைத்து மேலும் சில இடங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

வருங்காலத்தில் இந்தத் திட்டமானது காசித் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளுக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கலாம். மற்றவர்களுக்கு இந்தப் பயணமானது சிலிர்ப்பையும், அச்சத்தையும், பக்தியையும் கலந்த ஓர் உணர்வைத் தரும். ஆனால், இதில் பயணிக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் குமரகுருபரருக்கு காசியைப் பறந்து காட்டிய கழுகின் பார்வை இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை உணரும் வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.