ஐந்து பேர்.. ஐந்து செய்தி..
By DIN | Published On : 04th March 2018 05:39 PM | Last Updated : 04th March 2018 05:39 PM | அ+அ அ- |

"கி.ரா.' என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், தற்போது புதிதாக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார். 96 வயதிலும் அவர் முனைப்போடு எழுதி கொண்டிருப்பதுதான் இலக்கிய உலகில் ஓர்ஆச்சரிய நிகழ்வு.
"பேயோன்' என்ற பெயரில் இதுவரை எழுதி வந்தவரின் உண்மைப் பெயர் வெளியே தெரிய வந்திருக்கிறது. அவர், மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனின் (படம்) மகன் திவாகர்தான்.
கவிஞர் சக்திஜோதி "சங்கப் பெண் கவிதைகள்' என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் சரளமான புதுமொழியில் எழுப்பும் சித்திரங்களும், புதுமொழியும் முக்கியமானதாகிறது.
படப்பிடிப்புத் தளங்களுக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற புகாரை பொய்யாக்கி வருகிறார் நடிகர் சிம்பு. மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தங்குதடையின்றி நடைபெறுகிறதாம்.
கவிஞர் ராஜா சந்திரசேகர் தனது தேர்ந்தெடுத்த சுட்டுரைப் பதிவுகளைத் திரட்டி "மைக்ரோ பதிவுகள்' என்ற நூலை எழுதியுள்ளார். சந்தியா பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.