சர்வதேச அங்கீகாரம்

ரசிகர்களின் ஆதரவை நிச்சயம் பெறும் படம் என்று தெரிந்தால், அது முதலில் உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவது வழக்கமாகி வருகிறது.
சர்வதேச அங்கீகாரம்

ரசிகர்களின் ஆதரவை நிச்சயம் பெறும் படம் என்று தெரிந்தால், அது முதலில் உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவது வழக்கமாகி வருகிறது. "மேற்கு தொடர்ச்சிமலை' உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணம். உலகின் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று விருதுகளை தட்டிய பின்னர்,

அதன் வெளிச்சத்தை இங்கே பயன்படுத்தி படம் வெளியாவது வழக்கம். இந்த பாணியில் அடுத்து வரும் படம் "ஒற்றை பனைமரம்'. ஆர். எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.தணிகைவேல் இப்படத்தை தயாரித்துள்ளார். ஈழத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படம், இதுவரை 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது. புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் திரைக்கதையாக உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com