வெங்காய வெடி

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வெங்காய வெடி'.
வெங்காய வெடி


அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வெங்காய வெடி'.

கார்த்திக் ஸ்ரீராம், இளமி, அனு கிருஷ்ணா, ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கெளதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். செந்தில்நாதன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த நாயகன் நான்கு ஆண்டுகளாக மிகப் பெரிய நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அவன் வாழ்வில் அனைத்தும் நினைத்தபடியே சந்தோஷமாக இருக்கிறது . ஆனால் வாழ்வின் லட்சியமே காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற அவனுக்கு நினைத்தபடி காதலி அமையவில்லை. தனது கனவு தேவதையை தேடிக்கொண்டிருக்கிறார். அவன் தந்தை அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். நடந்த திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடில்லை. எனவே திருமணம் முடிந்த மூன்றாவது நாளே சென்னை திரும்புகிறார். நாயகனை தேடி அவனது மனைவியும் சென்னை வருகிறார் .

நாயகனை சந்திக்கும் நாயகி அவரிடம் ஒரு யோசனை தெரிவிக்கிறாள்.விபரீத யோசனையால் நடந்த பிரச்னைகளை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது திரைக்கதை.

சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com