அடுத்தடுத்த வாய்ப்புகள்

தமிழில் மிஷ்கின் இயக்கிய "முகமூடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால், பூஜா ஹெக்டேவுக்கு தொடர் வாய்ப்புகள் இங்கே இல்லாமல் போனது.
அடுத்தடுத்த வாய்ப்புகள்

தமிழில் மிஷ்கின் இயக்கிய "முகமூடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால், பூஜா ஹெக்டேவுக்கு தொடர் வாய்ப்புகள் இங்கே இல்லாமல் போனது. இதையடுத்து  தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்தார். அப்போது அவருக்கு கைக்கொடுத்த ஒரு சில வெற்றிகள் அவரை  முன்னணி வரிசைக்கு கொண்டு வந்து சேர்த்தது. 

தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் "பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். முதல் வாய்ப்பில் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பியவருக்கு, இப்போது பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஓப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com