பாப் இசையில் தனித்துவம்

பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள பாடகர் ஒமர் குடிங், "களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸூடன் இனைந்து "என்டூரேஜ்' பாடலை உருவாக்கியுள்ளார்.
பாப் இசையில் தனித்துவம்


பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள "பிக் ஓ' என்று அழைக்கப்படும் பிரபலமான பாடகர் ஒமர் குடிங், "களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸூடன் இனைந்து "என்டூரேஜ்' பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்த இந்த பாடலுக்கு ஏடிஜி என பிரபலமாக அறியப்படும் அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார். "என்டூரேஜ்' என்பது ராப் மற்றும் பாப் வகையின் இணைவு. பாடலின் ஒலிப்பதிவில் ஒரு புத்துணர்ச்சி இருக்கும், இது ரசிகர்களை ஈர்க்கும். தயாரிப்பாளர் - இசையமைப்பாளர் ஏடிஜி கூறுகையில், ""இந்த பாடலை கேட்பவர்களுக்கு ஒரு பரவசமான மற்றும் உற்சாகமான பயணத்தை நாங்கள் மூவரும் வழங்க விரும்பினோம். இசையில் மட்டுமல்லாமல்,
குரலிலும் ரிதம், ராப் மற்றும் பாப் ஆகியவற்றின் கலவையாக இது உருவாகி உள்ளது. தரத்தில் சமரசம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. பாடல் வெவ்வேறு அடுக்கு
களைக் கொண்டுள்ளது என்பதை அதை பார்க்கும் போது நீங்கள் உணர்வீர்கள்'' என்றார். கைபா பிலிம்ஸ் இந்தப் பாடலை தயாரித்துள்ளது. ஆப்பிள் மியூசிக் இணையத்தில் இது வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com