தங்க நகரம்

எகிப்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நினைவுச் சின்னம் நிறைந்த நகரமான லக்சரில் 3000 ஆண்டுகள் பழமையான லாஸ்ட் கோல்ட் சிட்டி (எல்ஜிசி) எனும் தொலைந்துபோன தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது.
தங்க நகரம்

எகிப்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நினைவுச் சின்னம் நிறைந்த நகரமான லக்சரில் 3000 ஆண்டுகள் பழமையான லாஸ்ட் கோல்ட் சிட்டி (எல்ஜிசி) எனும் தொலைந்துபோன தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது. புகழ்பெற்ற எகிப்திய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு, நாட்டின் உச்சக்கட்ட பழங்கால கவுன்சிலுடன் இணைந்து, மணலின் கீழ் புதைந்த நகரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

பிரமிடுகள், மம்மிகள் உள்ளிட்ட பல வரலாற்றுப் பொக்கிஷத்தை தன்னகத்தே கொண்ட நாடு தான் எகிப்து. அங்கு தோண்டத்தோண்ட பல அதிசயங்கள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் தற்போது புதையுண்டு போன ஒரு தங்க நகரத்தை எகிப்திய தொல்பொருள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. 

இந்த நகரம் "தி ரைஸ் ஆஃப் ஏடன்' என்று அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் அமன்ஹோடெப்பின் ஆட்சிக்கு முந்தையது. மேலும் துட்டன்காமுன் மன்னரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 2020-இல் ஆய்வைத் தொடங்கிய எகிப்திய குழு, கிட்டத்தட்ட முழுமையான சுவர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் கருவிகளால் நிரப்பப்பட்ட அறைகளுடன் நன்கு பாதுகாக்கப்பட்ட நகரத்தைக் கண்டறிந்துள்ளது.

இந்த இழந்த நகரத்தின் கண்டுபிடிப்பு துட்டன்காமுனின் கல்லறைக்குப் பிறகு இரண்டாவது மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்பு என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் எகிப்திய பேராசிரியர் பெட்ஸி பிரையன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com