மோடி அளித்த சூர்மா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து வெகுமதிகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
மோடி அளித்த சூர்மா


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து வெகுமதிகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது மிகப்பெரிய கெளரவமாகும். அது தனிநபர் பிரிவில் அபிநவ் பிந்த்ராவுக்கு பின் தடகளம் ஈட்டி எறிதலில் 23 வயதே ஆன நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.  அவருக்கு பல்வேறு மாநில அரசுகள், அமைப்புகள் பாராட்டி வெகுமதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. ஹரியாணா மாநில அரசு ரூ.6 கோடியும், பஞ்சாப் அரசு ரூ.2 கோடியும். பிசிசிஐ ரூ.1 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1 கோடியும், கல்வி நிறுவனமான பைஜூஸ் ரூ. 2 கோடியும், ஜிண்டால் நிறுவனம் ரூ.1 கோடியும், இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.75 லட்சத்தையும் வழங்கியுள்ளன. மேலும் இண்டிகோ விமானத்தில் ஓராண்டுக்கு இலவசமாக நீரஜ் சோப்ரா பயணிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மோட்டார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா எஸ்யுவி 700 ரக காரை வழங்குகிறது. 

தங்கப் பதக்கத்துடன் திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு சொந்த ஊரான பானிப்பட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று தங்க மகனுக்கு அற்புதமாக வரவேற்பை அளித்தனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களை சந்தித்து பிரதமர் மோடி கெளரவித்தார். அப்போது நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் பிடித்தமான சூர்மா என்ற இனிப்பை வழங்கி வியப்பை ஏற்படுத்தினார் மோடி.

சூர்மா என்பது, கோதுமை மாவில் நெய், வெல்லம் கலந்து செய்யப்படும் இனிப்பாகும்.  நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவிலும் பங்கேற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என நெகிழ்ச்சியுடன் கூறினார் ராணுவ வீரருமான நீரஜ் சோப்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com