மட்டி

ஆறு மொழிப் படமாக உருவாகி வருகிறது "மட்டி'.  இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்குகிறார்.
மட்டி

ஆறு மொழிப் படமாக உருவாகி வருகிறது "மட்டி'.  இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்குகிறார். குடும்பம், பகை,  பழிவாங்கல், ஆக்ஷன்,  திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது.  ஆர்.பி.பாலா  இப்படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.  யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒவ்வொரு மொழிக்குமான  கலாசார பண்பாட்டுத் தன்மையோடு பட உருவாக்கம் நடந்துள்ளது. இயக்குநர் டாக்டர் பிரகபல் பேசும்போது...  ""இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்பு அனுபவத்தையும் பெற முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் தயாரிப்பு நிறுவனம் மறுத்து விட்டது.  பல படங்களில் இடம் பெறாத  கதை நிகழ்விடங்கள் படத்தில் வருகின்றன.வாகனங்கள் செல்லாத பல இடங்களில் இதன் படப்பிடிப்பு சிரமப்பட்டு நடந்திருக்கிறது.  அதற்காகப் பெரிய அளவில்  திட்டமும் பயிற்சியும்  செயல்படுத்தப் பட்டிருக்கிறது''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com