நீண்ட நேர  சந்திர கிரகணம்...!

சூரிய கிரகணம் சில நிமிடங்களே நடக்கும். காரணம் சூரியனை ஒப்பிடும் போது சந்திரன் அளவில் மிகச் சிறியது.
நீண்ட நேர  சந்திர கிரகணம்...!

சூரிய கிரகணம் சில நிமிடங்களே நடக்கும். காரணம் சூரியனை ஒப்பிடும் போது சந்திரன் அளவில் மிகச் சிறியது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் அளவில் சிறியதாக இருப்பதால் சூரியனை ஓரளவிற்கு மறைக்க முடியும். முழுமையாக மறைக்க முடியாது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும். பூர்ண சந்திர கிரகணம் சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். ஆண்டிற்கு சூரிய கிரகணம் பூமியில் இடத்தைப் பொறுத்து ஒன்று முதல் நான்கு சூரிய கிரகணம் ஏற்படும். சிலசமயம் ஐந்து சூரிய கிரணங்கள் வருவதுண்டு. ஆனால் அவை அரிதிலும் அரிதாக நிகழ்வது. 1935 -இல் ஐந்து சூரிய கிரணம் நிகழ்ந்தது. இனி ஐந்து சூரிய கிரணங்கள் 2026-இல் தான் நிகழும். சந்திர கிரகணம் ஆண்டிற்கு ஒன்று முதல் மூன்று வரை நிகழலாம். சில வருடங்களில் சந்திர கிரகணம் வராமலும் இருக்கலாம்.

21 -ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் நவம்பர் 19 ஆம் தேதி நிகழ்ந்தது. சந்திர கிரகணம் எப்போதும் பெளர்ணமி அன்றுதான் நிகழும். சந்திர கிரகத்தின் போது நிலாவின் நிறம் சிவப்பு கலந்த வெண்ணிறமாக மாறிவிடும். பொதுவாகச் சந்திர கிரகணத்தை எல்லா நாட்டு மக்களும் பார்க்க முடியாது. நிலா பூமியிலிருந்து வானத்தில் ஏற்றக் கோணத்தில் பார்க்கும் விதமாக இருக்கும் போது மட்டுமே சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இந்த நீண்ட நேர சந்திர கிரகணத்தை வட அமெரிக்க மாநிலங்கள், கனடாவில் வாழும் மக்கள் தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா, ஆசிய நாடுகளில் வாழும் மக்கள் பார்க்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com