பயந்த பறவை

நூற்றுக்கணக்கான பறவைகள் இருந்தாலும் கிவி பறவை நியூசிலாந்தின் தேசிய அடையாளம். பறக்கத் தெரியாத கிவி ஒரே ஜோடியோடு 20 ஆண்டு வரை வாழக்கூடிய அதிசய பறவை. 
பயந்த பறவை


நூற்றுக்கணக்கான பறவைகள் இருந்தாலும் கிவி பறவை நியூசிலாந்தின் தேசிய அடையாளம். பறக்கத் தெரியாத கிவி ஒரே ஜோடியோடு 20 ஆண்டு வரை வாழக்கூடிய அதிசய பறவை. 
லட்சகணக்கில் இருந்தவை இன்று பெருமளவில் குறைந்துவிட்டன. கிட்டதட்ட நம் வீட்டுக் கோழியின் அளவுதான் இருக்கும் கிவிக்கு மிக நீண்ட அலகு. அதன் நுனியில் நாசித்துவாரங்கள் அபூர்வமான இந்த அமைப்பால் அதன் நுகரும் சக்தி அபாரம்.
பூமிக்கடியில் எங்கோ ஒளிந்திருக்கும் புழு பூச்சிகளை நீண்ட அலகால் இழுத்து உண்ணுகிறது. இரவில் மட்டுமே இரை தேட வெளிப்படும் நாக்டர்னல் இனம். நியூசிலாந்தின் எல்லா ஊர்களிலும் கிவி கன்சர்வேஷன் மையம் ஏற்படுத்தி அவற்றை வளர்த்து வருகிறார்கள். 
மிகவும் பயந்த பறவை. சத்தமே போடாமல், புகைப்படம் எடுக்காமல் இருந்தால்தான் பார்க்க முடியும். உடலோடு ஒட்டி, நெருக்கமான முட்கள் போல் இருக்கும் இறகுக்குள் மறைந்திருக்கும் இரு சிறிய சிறகுகள் பறக்க உதவுவதில்லை. மிகச் சிறிய கண்கள் உடையது. உலக பறவை இனங்களில் தன் உடல் எடையில் கால் பங்கு அளவுக்கு முட்டையிடும் ஒரே பறவை இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com