இளைஞர்கள் கூட்டணி

80-90-2000 ஆகிய காலக் கட்டங்களை இணைக்கும் வகையில் உருவாகி வரும் படம் "டேக் டைவர்ஷன்' .
இளைஞர்கள் கூட்டணி


80-90-2000 ஆகிய காலக் கட்டங்களை இணைக்கும் வகையில் உருவாகி வரும் படம் "டேக் டைவர்ஷன்' . கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை சிவானி செந்தில் இயக்குகிறார்.  "பேட்ட', "சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஏற்கிறார். சிவகுமார்,  பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ஜார்ஜ் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.   ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழு நீள ஜனரஞ்சகமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

""80களில் 90களில் மட்டுமல்ல 2000 - என இந்த தலைமுறையில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது. குறிப்பாக 80-களைச் சேர்ந்த ஒரு பெண்ணை காண்பிப்பது பெரும் சவால். இப்படத்திற்காக தேவா பாடிய  "மஸ்தானா மாஸ் மைனரு'  என்கிற கானா பாடல் இணைய உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு சாண்டி நடனமாடியிருக்கிறார். அதே போல "யாரும் எனக்கில்லை ஏனடி?' என்கிற  காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.  ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com