முஸோலினியின் வேண்டுகோள்
By -ஜே.மகரூப் | Published On : 22nd August 2021 06:00 AM | Last Updated : 22nd August 2021 06:00 AM | அ+அ அ- |

போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்த போது ஹிட்லரும், முஸோலினியும் தந்திகளை பரிமாறிக் கொண்டனர்.
முஸோலினி, ஹிட்லருக்கு தந்தி மூலம் "நிலைமை மோசமாக உள்ளது. உணவு அவசரமாகத் தேவைப்படுகிறது. தயவு செய்து அனுப்பி வையுங்கள்.'
ஹிட்லரிடமிருந்து முஸோலினிக்கு தந்தி "உணவு பொருள்கள் தங்களுக்கு ஒதுக்குவதற்கு வசதி இல்லை. வருந்துகிறேன். ஒவ்வொரு தானிய மணியும், உள்நாட்டிற்கும் ரஷ்ய முனைக்கும் தேவைப்படுகிறது. "பெல்டை' இறுக்கிக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன்.
முஸோலினியிடமிருந்து ஹிட்லருக்கு பதில் தந்தி வந்தது. "தயவு செய்து "பெல்ட்' அனுப்பி வையுங்கள். '