முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
வருமான வரி வாலி ருசிகரம்!
By மாதவன் | Published On : 12th December 2021 06:00 AM | Last Updated : 12th December 2021 06:00 AM | அ+அ அ- |

அரை நூற்றாண்டின் திரையிசைப் பாடல்களை ஆராய்ந்து பார்த்தால் அதில் வாலியின் அத்தியாயங்கள் அதிகமாய் நிறைந்திருக்கும். 1968-இல் பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்' படத்துக்கும், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சலுக்கும் என காலத்தை பேனாவால் ஒன்றிணைத்தவர் வாலி.
சோற்றுக்காக பாடல் வரிகட்டிய நான், எம்.எஸ்.வியுடன் சேர்ந்த பிறகு தான் வருமான வரி கட்ட ஆரம்பித்தேன்! என்று நக்கலடித்தவர். கண்ணதாசன் இறந்தபோது, "எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்' என்ற கண்ணீர் வரிகளை சொன்னவர் கவிஞர் வாலி.