திருமணம நிறுததம
By DIN | Published On : 11th July 2021 06:00 AM | Last Updated : 11th July 2021 06:00 AM | அ+அ அ- |

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் "நெஞ்சில் துணிவிருந்தால்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெகரீன் பிர்சாடா. இதையடுத்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் "நோட்டா' படத்தில் நடித்தார். அதன்பிறகு தனுஷுடன் "பட்டாஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்பு குவிந்து வருகிறது. தொடர்ந்து நடித்து வந்த மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோவை காதலித்து வந்தார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் பவ்யா பிஷ்னோவை திருமணம் செய்யவில்லை என்று கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார் மெகரீன் பிர்சாடா.
இது குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்...."" நானும், பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது இருவரின் நலன் கருதி நாங்கள் எடுத்த முடிவு. இனி பவ்யாவுடனும், அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை. இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால், இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்'' மெகரீன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...