பெட்ரோல் கிடைப்பது எப்படி?
By -ஜெயகோபால் | Published On : 18th July 2021 06:00 AM | Last Updated : 18th July 2021 06:00 AM | அ+அ அ- |

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த கடல்களில் வாழ்ந்த மிதவை உயிரிகள், பாசிகள் மற்றும் தாவர இனங்கள் இறந்த பின் கடலடியில் படிந்து விடுகின்றது.
இந்த உயிரிகள் படிந்த படிவுப்பாறைகள், பூமிக்கடியில் புதைந்து விடுகின்றது. இவ்வாறு புதையுண்டு இருக்கும் போது, இப்படிவுப்பாறைகள் புவியில் நடைபெற்ற புவிமேலோட்டு இயக்கங்கள் போன்ற நிகழ்வுகளால் மிகுந்த அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்படுத்தப்படுகின்றன.
இவ்வுயிரிகளில் அடங்கியுள்ள கரிம பொருள்கள் ஆக்சிஜன் இல்லா சிதைவினால் மாற்றமடைந்து நில (கச்சா) எண்ணெய்யாக பூமிக்கடியில் கிடைக்கின்றது.
இந்த கச்சா எண்ணெய்யிலிருந்து பெட்ரோல் எனப்படும் பெட்ரோலியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இந்த நில (கச்சா) எண்ணெய் 6500 லட்சம்
ஆண்டுகளுக்கு முன்பான காலத்தை சேர்ந்ததாகும்.