விண்வெளியில் முதல் திரைப்படம்

விண்வெளியில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஷ்யா தட்டிச் சென்றுள்ளது.
விண்வெளியில் முதல் திரைப்படம்

விண்வெளியில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஷ்யா தட்டிச் சென்றுள்ளது.

விண்வெளி தொடர்பான பல ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் செட் போட்டு அல்லது கிராபிக்ஸ் வித்தையால் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

விண்வெளியில் மனிதன் என்ற லட்சியம் மேலைநாடுகளுக்கு தோன்றும் முன்பே இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் எம்ஜிஆர் நடித்து வெளியான "கலையரசி' தான்!

விண்வெளிப் பயணம் குறித்த அநேக செய்திப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விண்கலத்தில் உண்மையாகப் பயணம் செய்து 12 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு பூமியை வந்தடைந்துள்ளது ரஷ்ய திரைப்படக் குழு. படத்தின் இயக்குநர், நடிகை, ஒரு நிஜ விண்வெளி வீரர் என மூன்றுபேர் மட்டுமே அடங்கியது இந்த குழு..!

விண்வெளியில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் உலகின் முதல் திரைப்படத்தின் தலைப்பு "சவால்' என்பதாகும். கதை மருத்துவர் ஒருவர் தொடர்பானது. விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழும் ரஷ்ய விண்வெளி வீரருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவர் பூமிக்குத் திரும்ப முடியாத நிலைமையில் இருக்க, அவரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற டாகடர் ஒருவரை பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். விண்வெளி வீரருக்கு விண்வெளியில் சிகிச்சை அளித்து காப்பாற்றி டாக்டர் பூமிக்குத் திரும்புகிறார். டாக்டராக நடித்திருப்பவர் நடிகை யூலியா பெரெஸில்ட்.

ஹாலிவுட் நடிகரான டாம் குரூûஸ நாயகனாக நடிக்க விண்வெளிக்கு சென்று அங்கு படப்பிடிப்புகளை நடத்த இருப்பதாகக் கடந்த வருடத்தில் அமெரிக்க விண்வெளிக்கு கழகமான "நாசா' தெரிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ரஷ்யா உடனடியாகச் செயல்பட்டு நாசாவை முந்திக் கொண்டுள்ளது.

ரஷ்யாவின் பிரபல இயக்குநரான கிளிம் ஷிப்பென்கோ இயக்கத்தில், யூலியா பெரெஸில்ட்டை நாயகியாக வைத்து, "வைசவ்' என்ற முதல் விண்வெளி திரைப்படத்தை ராஸ்கோமாஸ் என்ற ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிறைவு செய்துள்ளது.

"வைசவ்' என்றால் "சவால்' என்று பொருள். முதல் கட்ட வேலையாக ரஷ்யா, படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை, "பிராகிரஸ் எம்.எஸ். 17 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சில வாரங்களுக்கு முன்னரே அனுப்பிவிட்டது. அதன் பின் நிஜ விண்வெளி வீரர் இருவர், பட இயக்குநர், நடிகை விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அக்டோபர் 5 -இல் புறப்பட்டுச் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில், அமெரிக்கா ரஷ்ய, ஃபிரான்ஸ், ஜப்பான் நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

அக்டோபர் 17-இல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலத்தை விடுவிப்பதில் சிறு கோளாறு ஏற்படவே... சிறிது தாமதம் ஆனது. பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு பூமிக்குப் புறப்பட்டனர். பூமிக்கு வந்ததும் குழுவினரை பத்து நாள் பூமியின் சூழலுக்கு ஒத்துப் போக பயிற்சி தந்து கொண்டிருக்கிறார்கள்.

விண்வெளி ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் எப்போதுமே போட்டிதான். விண்வெளியில் முதல் முதலாக துணைக் கோள் ஏவியதும், விண்வெளியில் ஆண், பெண்ணை சுற்றிவரச் செய்ததும் ரஷ்யா என்றால், அமெரிக்கா விண்வெளி வீரர்களை நிலவில் காலடி பதிக்கச் செய்து அதிரடி காட்டியது. ரஷ்யாவின் விண்வெளிப் படப்பிடிப்பிற்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கப் போகிறதோ?

விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி முடித்து பாதுகாப்பாகத் திரும்பியது, இனி விண்வெளிப் பயணங்கள் மெட்ரோவில் சென்று வருவது மாதிரி எளிமையாக மாறிவிடும் என்று உறுதிப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com