வானில் சாகசம்
By -சக்ரவர்த்தி | Published On : 31st October 2021 06:00 AM | Last Updated : 31st October 2021 06:00 AM | அ+அ அ- |

ஜாவ்லின் வீரராக உலக சாதனை புரிந்த நீரஜ் சோப்ரா, "சாக்லேட்' பையனாக மாறியிருக்கிறார். விலை உயர்ந்த விதம் விதமான உடைகளில் தற்போது வலம் வருகிறார்.ஓய்விற்காக சில நாள்கள் மாலத்தீவில் கழித்த நீரஜ், இந்தியா திரும்பாமல் நேராக துபாய் சென்றுவிட்டார். துபாயில் வானத்திலிருந்து குதித்து சாகசம் செய்திருக்கிறார்.
நீரஜ் முதல் முதலாக வானத்திலிருந்து குதித்துள்ளார். "தொடக்கத்தில் வானில் பறக்கும் விமானத்திலிருந்து குதிக்க பயமாகத்தான் இருந்தது. குதித்ததும் பயம் கழன்று ... ஆனந்தம் என்னை சூழ்ந்து கொண்டது.
என்னைப் போன்ற இளைஞர்கள் வானிலிருந்து குதிப்பதை முயற்சிக்கலாம் என்ற குறிப்புடன் வானத்தில் குதித்து தரையில் இறங்கும் காணொலியை நீரஜ் தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். வானிலிருந்து குதிக்கும் போது நீராஜுடன் பாதுகாப்பாளரும் உடன் இருந்தார்.
"ஜெர்மனியைச் சேர்ந்த கோச் கிளாஸ் பார்டோனிட்ஸ் எனக்குப் பொருத்தமானவர். அடுத்த ஒலிம்பிக்ஸ் வரை அவர் எனது பயிற்சியாளராகத் தொடரணும்... சில பயிற்சியாளர்கள் பயிற்சிகளின்போது மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். கடினமான பயிற்சிகளின் போது கூட கிளாஸ் ஜோக் அடித்து அழுத்தத்தை, அயர்ச்சியைக் குறைத்துவிடுவார்... பயிற்சி செய்வதில் சலிப்பு தோன்றவே தோன்றாது. அவரது பயிற்சி முறைகள் எனக்குப் பிடித்துப் போய்விட்டது. கிளாஸ் சாருடன் எனக்கு ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டது... அந்த பந்தம் தொடரணும்'' என்கிறார் நீரஜ்.