பூனைகளுக்கு வீடு

இந்தியாவில் இன்னும் பல ஏழை மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கும் நிலையில் பூனைகளுக்கு என தனி இல்லம் ஒன்றை அமைத்து பராமரித்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த உபேந்திர கோஸ்வாமி.
பூனைகளுக்கு வீடு


இந்தியாவில் இன்னும் பல ஏழை மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கும் நிலையில் பூனைகளுக்கு என தனி இல்லம் ஒன்றை அமைத்து பராமரித்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த உபேந்திர கோஸ்வாமி.

இவர் தனக்கு சொந்தமான இடத்தில், "கேட் கார்டன்' என்கிற பெயரில் பூனைகளுக்கென ஒரு இல்லத்தை நிறுவி இருக்கிறார். 

இது பற்றி அவருடைய அனுபவத்தை கேட்ட போது:-

""ஒவ்வொரு வருடமும் மறைந்த சகோதரியின் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுகிறோம். அப்படி ஒரு முறை கொண்டாடும் போது ஒரு பூனை எங்கள் வீட்டிற்குள் நுழைந்து அவளுடைய பிறந்தநாள் கேக்கை சாப்பிட்டது. அந்த நிகழ்வு நடந்த நாள் முதல், அந்த பூனை எங்களுடன் தங்கியிருக்கிறது. அது எங்கள் சகோதரி என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பூனையின் வடிவத்தில் எங்களுடன் தங்கியிருக்கிறார். 

எங்களிடம் நான்கு ஏசி அறைகள் மற்றும் 12 படுக்கைகளுடன் 16 குடிசைகள் உள்ளன. மாலை நேரங்களில் பூனைகள் விலங்கு தொடர்பான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் ஒரு மினி தியேட்டர் உள்ளன. பூனைகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு வழங்கப்படுகிறது. பூனைகளுக்கு வழக்கமான கால்நடை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. 

இந்த பூனைகள் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகும், நாங்கள் அவற்றை முறையாக கவனித்துக்கொள்வதை உறுதி செய்கிறோம்''  என்கிறார் உபேந்திர கோஸ்வாமி.  

இவரின் மனைவி பள்ளித் தலைமையாசிரியராக இருக்கிறார். அவரும் கோஸ்வாமியின் பூனை வீட்டை கவனிப்பதில் உதவுகிறார். பூனை வீட்டை பராமரிக்க இந்த தம்பதியினர் மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்கிறார்கள். நுழைவுக் கட்டணத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணிநேரம் பார்வையாளர்களுக்கு பூனைத் தோட்டத்தை பார்க்க அனுமதிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com