படப்பிடிப்பு முடிந்தது
By DIN | Published On : 26th September 2021 05:01 PM | Last Updated : 26th September 2021 05:01 PM | அ+அ அ- |

சரித்திரத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் படம் "பொன்னியின் செல்வன்'. பல தலைமுறைகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் "பொன்னியின்செல்வன்'. ஏற்கெனவே இதை படித்து பலர் பரவசமாகினர். பலரும் இதை படமாக்க நினைத்தும் முடியாமல் போனது. ஆனால் அதை தற்போது முடித்து காட்டிள்ளார் மணிரத்னம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் படப்பிடிப்பு தொடங்கிய காலத்திலிருந்து பல தடைகள் இருந்தன. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டாலும், இப்போது சாத்தியமாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஹைதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது.
இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த "பொன்னியின்செல்வன்' முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ""இப்படி ஒரு படம் இனி அமையாது. அதை எடுக்கவும் முடியாது.. அதற்கு வாய்ப்பே இல்லை.. இதை மணிரத்னம் தான் செய்ய முடிந்தது.. படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்..'' என்று இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.