பக்தன் பிரார்த்தனையைக் கேட்கறது நம்ம கடமை!

எல்லோருமே மகா பெரியவருக்குப் பிரியமானவர்கள் என்றாலும் குழந்தைகள், அதுவும் குறிப்பாக வேதம் பயிலும் குழந்தைகள் என்றால் உயிர்.
பக்தன் பிரார்த்தனையைக் கேட்கறது நம்ம கடமை!

எல்லோருமே மகா பெரியவருக்குப் பிரியமானவர்கள் என்றாலும் குழந்தைகள், அதுவும் குறிப்பாக வேதம் பயிலும் குழந்தைகள் என்றால் உயிர்.  "வீடு, வாசல் எல்லாம் விட்டுட்டு நாம கேட்டுக் கொண்டதுக்காக பிள்ளைகளை நம்மோட வேதம் படிக்க அனுப்பி வைக்கிறா' என்று வேதம் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடமும் ரொம்ப மரியாதை. மற்ற பெற்றோர்களும் வேதம் படிக்கிற குழந்தைகளை எல்லா குடும்ப விசேஷங்களின்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். 

"உங்க குடும்ப நண்பர்கள், பந்துகள் இவங்களோடு  வேலை செய்யறவங்க குழந்தைங்க இப்படி ஏழை பாழைகளையும் கொஞ்சம் சேர்த்துக்கோங்கோ.. இதைச் செய்ய கூச்சமாக இருந்தா ஒரு அஞ்சு ரூபாய் மடத்துக்கு அனுப்புங்கோ. நான் இங்கே வேதம் படிக்கிற குழந்தைகள் செலவுக்கு வெச்சுக்கறேன். நீங்க எம்.ஓ. அனுப்பின பணத்துக்கு ரசீதும் பிரசாதமும் அனுப்பறேன். நீங்க என்னை ஆசையாக கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக்கறேன். குழந்தைகள் வேதம் படிச்சா நமக்கும் நாட்டுக்கும் நல்லது' என்று வட இந்திய முகாம் ஒன்றில் மகா பெரியவர் சொன்னார்.

இதன்படி நிறைய பேர் அஞ்சு ரூபாயை எம்.ஓ. அனுப்பினார்கள். மடத்து அலுவலர் அண்ணாதுரை அய்யங்கார் கொஞ்சம் மிரண்டு போனார்.

"திடீர்னு மலையாக குவிஞ்சிருக்கிற இந்த வேலைக்கு யார் வரவு வச்சுண்டு பதில் போட்டு பிரசாதம் அனுப்பறது? அதனால் நேர்ல வந்து பணம் கொடுக்கறவங்களுக்கு மட்டும் ரசீதும் பிரசாதமும் கொடுக்கலாம்னு அபிப்பிராயப்பட்டார். மெதுவாக இதைப் பெரியாவிடம் சொன்னார்.

பெரியவா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.  இல்லை. நான் பக்தர்களுக்கு வாக்கு கொடுத்தாச்சு. வேலை கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா பணத்தை அனுப்பறவா பக்தியோட அனுப்பறா, நிச்சயம் பிரசாதம் வரும்னு நம்பறா. பணத்தோட தங்கள் பிரார்த்தனையையும் அனுப்பறா. அதுக்கு செவி சாய்க்கறது நம்ம கடமை. அதனால் நேர்ல வர்றவான்னு இல்லை. தபால் அனுப்பினவாளுக்கும் பிரசாதம் அனுப்பறதுதான் மரியாதை. அப்படியே செஞ்சிடுங்கோ'' என்றார்.

(காஞ்சி மடத்தில் ஸ்ரீமகா பெரியவர் ஆராதனை டிச. 18-இல் அனுசரிப்பு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com