ரொட்டி வடிவில் இறைவன்..!

நாட்டின் விடுதலைப் புரட்சி இயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மகாத்மா காந்திஜியும், கவியரசி சரோஜினி தேவியும் வேறு பல காங்கிரஸ் தொண்டர்களும் அலிகார் சிறை. ஒருநாள் மாலைப் பொழுது.
ரொட்டி வடிவில் இறைவன்..!

நாட்டின் விடுதலைப் புரட்சி இயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மகாத்மா காந்திஜியும், கவியரசி சரோஜினி தேவியும் வேறு பல காங்கிரஸ் தொண்டர்களும் அலிகார் சிறை. ஒருநாள் மாலைப் பொழுது. "உலகப் புகழ்ப் பெற்ற சிந்தனையாளர்கள், பேச்சாளர்களின் கருத்துகள் சிலவற்றை நான் கூறுவேன். அவை யாருடையது என்று நீங்கள் கூற வேண்டும்'' என்று காந்திஜியிடம் சரோஜினி தேவி கேட்டுக் கொண்டார்.

பல்வேறு பொன்மொழிகளை சரோஜினி அம்மையார் சொல்லிக் கொண்டே வர, அதை கூறியவர்களின் பெயர்களை காந்திஜி சரியாகத் தெரிவித்துவந்தார்.

கடைசியாக, "ஆண்டவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் காட்சி அளிக்கிறான் ! என்ற சிந்தனைமிகு பொன்மொழி யாருடையது'' கேட்டார் .

காந்திஜி மௌனம் சாதித்தார்.  பின்னர் சரோஜினி தேவி அன்பான புன்சிரிப்புடன் காந்திஜியை நோக்கி, ""உலகத்தைக் கவர்ந்த இந்த உயர்ந்த சிந்தனை எங்கள் பாரதத் தேசத் தந்தை காந்திஜி உடையதாகும்'' என்று மகிழ்ச்சிப் பொங்கச் சொன்னார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com