நாட்டு எல்லைகள்!

கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் மாயனூர் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் செல்லாண்டியம்மன் என்ற கிராம தேவதையின் கோயில் காவேரிக்கரையில் அமைந்துள்ளது.
நாட்டு எல்லைகள்!

கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் மாயனூர் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் செல்லாண்டியம்மன் என்ற கிராம தேவதையின் கோயில் காவேரிக்கரையில் அமைந்துள்ளது.

இக்கோயிலிலிருந்து ஒரு கரை போன்ற அமைப்பு இவ்வூரின் அருகில் உள்ள சங்கர மலை வழியாகச் செல்கிறது.

இக்கரையை "மதுக்கரை' என இப்பகுதியில் வாழும் மக்கள் அழைக்கின்றனர். "மதிற்கரை' என்பது மதுக்கரை என மருவி வழங்கப்படுகிறது.

மதுக்கரை சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு எல்லையாக இருப்பதாகவும், இக்கரை மதுரை வரை செல்வதாகவும் கூறுகின்றனர்.

கரையின் அமைப்புஇக்கரை உடைந்த கற்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சுவர் 5.5 அங்குலம் உடையதாக விளங்குகின்றது. கற்கள் தரையிலிருந்து ஐந்து வரிசைகள் அடுக்கப்பட்டு காணப்படுகின்றன. உடைந்த கற்களாக இருந்தாலும் சுவற்றின் விளிம்பு நேராக அமைக்கப்பட்டு காணப்படுகிறது. இச்சுவர் செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. சுமார் 18 மீ. இடைவெளிக்கு இச்சுவர் "ப' எழுத்து வடிவத்தில் வளைந்து செல்கிறது. அவ்வாறு செல்லும் இடத்தில் இவற்றுக்கு இடையே 18 மீ இடைவெளி விட்டு கோட்டைச் சுவர் போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியைச் சேர்ந்த சிலர் இச்சுவரிலிருந்து கற்களை சில இடங்களில் இதனுடைய சிறப்பை உணராமல் அகற்றி இருக்கின்றனர்.

சேர, சோழ, கொங்கு நாட்டு எல்லைகள் மதுக்கரை சேர, சோழ, கொங்கு நாட்டின் எல்லையாகக் விளங்குகிறது என்பதை அறிய முடிகிறது.

கொங்கு நாட்டின் எல்லைகளை கூறும் பொழுது கொங்கு மண்டலம் இம்மதிற்கரையை கிழக்கு திசைக்கு எல்லையாக குறிப்பிடுகிறது.

மதிற்கரை கீட்டிசை தெற்கு பழனி மதிகுடக்குக் கவித்துவ வெள்ளை மழை பெரும்பாலை கவின் வடக்கு விதித்துள நான்கெல்லை சூழ வள முற்று மேவி விண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திட நீள் கொங்கு மண்டலமே.

இங்கு சேரர், சோழர், பாண்டியர் எல்லை பிரித்தததைப் பற்றிய செய்தி மதுக்கரை பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எல்லை பிரிந்தததை பற்றி ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்கி வருகிறது.

சோழ நாட்டின் எல்லைகளாக கிழக்கே கடல், தெற்கே வெள்ளாறு, வடக்கே ஏணாட்டு வெள்ளாறு, மேற்கே கோட்டைக் கரையும் இருப்பதாக சோழ மண்டலம் குறிக்கப்படுகிறது. இந்த கரை அமைப்பு "கோட்டைக்கரை' எனவும் அழைக்கப்பட்டது.

கடல் கிழக்கு தெற்குக்கரை புரள வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் வடதிசையில் ஏணாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் நாட்டுக்கு சோ நாட்டுக்கு எல்லை எனச் சொல்.

மதிற்கரையை பற்றி சில கல்வெட்டுகளிலும் குறிப்புகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சேந்தமங்கலம் கல்வெட்டு இம்மதிற்கரையைப் பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது. அவரால் சோழமண்டலக் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட பெற்ற தானத்தைப் பற்றி கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. அக்கல்வெட்டில் சோழ மண்டலத்தின் எல்லைகளாக வடக்கில் கடிலம் ஆறு, கிழக்கே கடல், தெற்கே வெள்ளாறு, மேற்கே கோட்டக்கரை ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

ஆகவே இக்கரை 14 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அதாவது சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கருத முடிகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இம்மதிற்கரையை அமைப்பினை பாதுகாக்க வேண்டியது நமது
கடமையாகும்.

கி. ஸ்ரீதரன்
தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com