நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த...

நோய் தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நேரத்தில், உணவில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை  ஊட்டசத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறா
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த...

நோய் தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நேரத்தில், உணவில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை  ஊட்டசத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்:

1 .  பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது, செரிமான அமைப்பை வலுவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் பப்பாளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் ஆகியவை உடலை பல பிரச்னைகளில் இருந்து விலக்கி வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2 . பாதாம்

பாதாம் பருப்பில்  உள்ள வைட்டமின் ஈ, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால், உணவில் பாதாம் சேர்ப்பதன் மூலம் கரோனா மட்டுமல்ல உடலின் பல பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

3.  தயிர்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த தயிர் பெரிதும் உதவும். தயிரில் உள்ள வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால் உங்கள் உணவில் சந்தையில் இருந்து வாங்கிய தயிரை (இன்ழ்க்) சேர்த்துக் கொள்வதை விட, நீங்கள் வீட்டில் உறைய வைக்கும் தயிர் மிகவும் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 .  கீரை

கீரையில் வைட்டமின் சி உள்ளது. மேலும், இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன.  எனவே, கீரையை உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். கீரையை சமைத்தோ அல்லது கீரை ஜூஸ் வடிவிலோ உணவில் சேர்க்கலாம்.

5. நெல்லிக்காய்

வைட்டமின் சி நெல்லிக்காயில், அதிகம்  காணப்படுகிறது. எனவே  உணவில் நெல்லிக்காயை சேர்த்தால்,  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படும். நெல்லிக்காய் ஜாம், நெல்லிக்காய் சட்னி, நெல்லிக்காய் சாறு போன்ற வடிவில்  உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com