அசத்தல் ஆமை!

கின்னஸ் சாதனையை மனிதர்கள் மட்டும்தான் நிகழ்த்த வேண்டுமா..? 190 வயது ஆமையும் கின்னஸ் சாதனை புரியும்.
அசத்தல் ஆமை!


கின்னஸ் சாதனையை மனிதர்கள் மட்டும்தான் நிகழ்த்த வேண்டுமா..? 190 வயது ஆமையும் கின்னஸ் சாதனை புரியும். பொதுவாகவே ஆமை நீண்ட நாள்கள் வாழுபவை. அதிக ஆண்டுகள் உயிர் வாழும் ஆமை என்ற பிரிவில் "ஜோனத்தான்' என்ற பெயரிடப்பட்ட ஆமை 190 ஆண்டுகள் கடந்து வாழ்வதற்காக சாதனை ஆமையாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்ட செயின்ட் ஹெலினா தீவில் "ஜோனத்தான்' வாழ்ந்து வருகிறது.
56 ஆண்டுகள் மாற்றப்படாத கின்னஸ் சாதனையை "ஜோனத்தான்' மாற்றியுள்ளது. "ஜோனத்தான்' பிறந்த நாள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆமை ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டது.
ஜோனத்தான் 1832 -இல் பிறந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஜோனத்தானுக்கு 190 வயதைவிட அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மூப்பு காரணமாக ஜோனத்தானுக்கு பார்வை இல்லை. பலவித மணங்களைப் புரிந்து கொள்ளும் திறனும் இல்லை. தன்னைக் கரிசனமாகக் கவனித்துக் கொள்ளும் ஜோ ஹோல்லின்ஸ் என்பவரின் குரலை வைத்து அவரை அடையாளம் கண்டு கொள்ளுமாம்...!
யானையின் முதுகை தேய்த்து பாகன் குளிப்பாட்டிவிடுவதை போல, ஜோ ஜோனத்தானை சோப்பு போட்டு குளிப்பாட்டிவிடுகிறார். ஜோனத்தானுக்கு உணவு ஊட்டப்படுகிறது. விட்டமின், தாது சத்து உள்ள மருந்துகளும் தரப்படுகின்றன. முட்டைகோஸ், வெள்ளரி, லெட்டூஸ் , ஆப்பிள், வாழைப்பழம் ஜோனத்தானுக்குப் பிடித்த உணவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com