மன அழுத்தத்தை போக்கும்  யோகா விருட்சஸனம்

மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும்நிலையில் நாள்தோறும் விருட்சஸனயோகா பழகி வந்தால் மன அமைதி, சமநிலை உணர்வும் கிடைக்கும்.
மன அழுத்தத்தை போக்கும்  யோகா விருட்சஸனம்



மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் நாள்தோறும் விருட்சஸனயோகா பழகி வந்தால் மன அமைதி, சமநிலை உணர்வும் கிடைக்கும். இந்த ஆசனம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்ததை நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

செய்முறை: விருட்சம் என்பதற்கு மரம் என்று பொருள்.

1.கண்களை முடிய நிலையில், வலது முழங்காலை மடக்கி வலது பாதம்  இடது காலின் உள் தொடையில் இருக்குமாறு வைக்கவும் .
2.இடது கால் நேராக அதாவது 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு சரி செய்துகொள்ளவும்.
3. இரு கைகளை மார்பிற்கு நேராக  கும்பிடும் மாதிரி வைக்கவும். 
4. இரு கைகளையும்  மெதுவாக தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
5.மெதுவாக 5-10 முறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட வேண்டும்.
6. இரு கைகளையும் மெதுவாக கீழ்இறக்கி கொள்ளவும், வலதுகாலை மெதுவாக கீழ்இறக்கி  இயல்பு நிலைக்கு வரவேண்டும். இதே போல் இடது காலை மாற்றி செய்யவேண்டும்.

நம் மனதை வலிமைப்படுத்துகிறது. மனம் அலைந்து திரிவதை தடுத்து சமநிலைப்படுத்துகிறது. அமைதியான சமநிலை உணர்வை உருவாக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com