மாயோன்

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம்  "மாயோன்'.
மாயோன்


டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் "மாயோன்'. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இளையராஜாவின் இசையில் வெளிவந்துள்ள பாடல்களும் ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான சைக்கோ படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, "மாயோன்' படம் "யு' சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படம் தணிக்கையில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாராட்டுகளை குவித்துள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் - அவர்களுக்கு செளகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக "மாயோன்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு "ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்படப் பதிப்பையும் வெளியிட்டுள்ளது.

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதுகிறார். கிஷோர் இயக்குகிறார். அருண்மொழிமாணிக்கம் பேசும் போது.. "" எனக்குள் பல காலம் இருந்த கதை. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். சைக்கோ படத்தின் போது தான் பார்வையற்றோருக்கு ட்ரெய்லர் செய்ய வேண்டும் என்ற ஐடியா முதலில் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு சமூக அக்கறையாக இதை செய்தோம். படத்தை பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும்'' என்றார். இப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com