ஒரு புதிய அத்தியாயம்

தமிழ் பதிப்பக உலத்துக்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. ஆனால், நீண்டகாலமாக சிறுகதைகள், நாவல்கள். கவிதைகள் போன்றவையே புத்தகங்களாக வெளியிடப்பட்டு வந்தன.
ஒரு புதிய அத்தியாயம்

தமிழ் பதிப்பக உலத்துக்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. ஆனால், நீண்டகாலமாக சிறுகதைகள், நாவல்கள். கவிதைகள் போன்றவையே புத்தகங்களாக வெளியிடப்பட்டு வந்தன. இவற்றுக்கு அப்பால், கதையல்லாத பிரிவில் இலக்கிய,ஆன்மிகப்புத்தகங்களும், ஜோதிடம் மற்றும் சமையல் புத்தகங்களும் தான் அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தன. 2004 -ஆம் ஆண்டில் தமிழ்ப் பதிப்புலகில் காலடி எடுத்து வைத்த கிழக்கு பதிப்பகம், பதிப்புலகில் ஒருபுதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது என்றால் அது மிகை இல்லை.

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரிசேஷாத்ரியுடன்ஒருபேட்டி:

கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பம்?

ஆங்கிலப் பதிப்புலகம் போல இங்கே புரொஃபெஷனலிசம் இல்லை. அட்டை வடிவமைப்பில் துவங்கி, விற்பனை நெட்ஒர்க் வரை செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஒரு கையெழுத்துப் பிரதியை புத்தகமாக வெளியிடும்போது, அச்சுக்கோர்த்து, பிழைதிருத்தினால் போதும் என்ற மனப்பான்மையே இருந்துவருகிறது. பதிப்பகங்கள் அதிகம் முதலீடு செய்வதில்லை; ஏராளமான எண்ணிக்கையில் புதிய தலைப்புகள் கொண்டு வருவதில்லை. விற்பனைநெட் ஒர்க்கினை முழுமையாக விரிவுபடுத்தி, புத்தகங்களை இன்னும் அதிகமாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டுவதில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு, அதே சமயம் தமிழ் புத்தகங்களுக்கு மிகப் பெரியசந்தை இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் கிழக்குபதிப்பகம்.

வெற்றிக்காக யுக்திகள் என்ன?

வரலாறு, சுயமுன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, முதலீடு, உடல்நலம் என்று ஏராளமான பிரிவுகளில் புத்தகங்களுக்கான தேவை இருக்கிறது; அவற்றுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எங்களுக்குப் புரிந்திருந்தது. எனவே, பத்திரிகைகளுக்கு ஆசிரியர் குழு என ஒன்று இருப்பது போல, பதிப்பகத்திலும் ஆசிரியர்குழு இருக்க வேண்டும் என முடிவுசெய்து, பத்திரிகை அனுபவம் கொண்டவர்களைக் கொண்ட ஆசிரியர்க்குழுவினை உருவாக்கினோம்.

இன்னொரு பக்கம், புதியஎழுத்தாளர்கள் பலரையும் உருவாக்க நடவடிக்கை எடுத்தோம். புதினம் அல்லாத பிரிவில் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் எழுதுவதற்கு எழுத்தாளர்களைத் தயார்செய்தோம்.

வாசகர்கள் சிரமம் இல்லாமல் படிப்பதற்கு செளகரியமாக புத்தகங்களின் அட்டைவடிவமைப்பு, உள்ளே பக்க வடிவமைப்பு, எழுத்துரு, உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களைப் புகுத்தினோம்.

விற்பனைக்கான நெட் ஒர்க்கினை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுத்தோம். இவற்றின் பலனாக ஒரு சில ஆண்டுகளிலேயே பல்வேறு பிரிவுகளிலுமாக சுமார் நாநூறு எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 2300 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட முடிந்தது.

புத்தக விற்பனையில் ஒரு வித சுணக்கம் ஏற்பட காரணம்?

கரோனா தொற்றுக்கு சில ஆண்டுகள் முன்பாகவே இந்த சரிவு துவங்கிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 2015 ஆண்டு டிசம்பர் வெள்ளம் முதல் என்று சொல்லலாம். பதிப்பாளர்கள் எல்லோரும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருப்பார்கள். அவற்றுக்காக, புதிய புத்தகங்கள், மறுபதிப்புகள் என்று தயாராவார்கள். 2015-இல், புத்தகக்கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டபோது, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு விற்பனையை வெகுவாக பாதித்தது.

அதன் பிறகு பணமதிப்பு இழப்பு நடவடிக்கையினால் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கம் புத்தக விற்பனையிலும் காணப்பட்டது. அதன் பிறகு ஜி.எஸ்.டி. அச்சுக்காகிதத்தின் மீதான அதிகவரி, இவற்றுக்கான கூடுதல் செலவு முழுவதையும் வாசகர்கள் தலையில் கட்ட முடியாத சூழ்நிலை. அதனால் லாபம் அடிபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக, சென்னை புத்தகக் கண்காட்சியை வழக்கமான பொங்கல் சமயத்தில் நடத்த முடியாமல், தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம். கடந்த பத்தாண்டுகளில் புத்தகங்களுக்கு நூலக ஆர்டர் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னைகள் இப்படி வரிசையாக காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நிலைமை எப்போது சீரடையும்?

இப்போது எங்களுடைய பிசினஸ் மாடலையே தற்போதைய சூழலுக்கு ஏற்பமாற்றிக் கொண்டிருக்கிறோம். அகலக்கால் வைக்காமல், எச்சரிக்கையோடு இருக்கிறோம். ஆனாலும் ஒரு விஷயம்.வாசகர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பதைமட்டும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பொது முடக்ககாலத்தில், அமேசான், கிண்டில் போன்ற ஈ காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தியும், எங்களின் போன் மூலமாக புத்தகங்களை ஆர்டர் செய்யும்"டயல்ஃபார்புக்ஸ்' மூலமாகவும் மாதம் பத்து, பதினைந்து லட்சம் அளவுக்கு புத்தகங்களைவாசகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்தோம்.

புத்தகங்களை விற்பனை செய்யும் நெட்ஒர்க் விரிவுபடுத்தப்படவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com